vidaamuyarchi ott: அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பு! விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் எப்போது?
சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க விடாமுயற்சி படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. வரும் மார்ச் 3ஆம் தேதி இந்த படம் netflix-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அஜித்குமார் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் குமார் விடாமுயற்சி படத்தை ரசிகர்களுக்காக ரிலீஸ் செய்திருக்கிறார். அந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்னர் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும் ஏப்ரலில் குட் பேட் அக்லி படமும் வெளியாக இருக்கிறது. நடிப்பு தவிர்த்து கார் ரேஸிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அஜித் குமார். தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித்குமார் கலந்து கொண்டிருக்கிறார்.
முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் தாமதமாக அந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தியேட்டர்களில் நேரடியாக விடாமுயற்சி வெளியானது. திரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இருந்த இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இந்த படம் ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்றது. மனைவியை மீட்கும் கணவரின் போராட்டம் தான் இந்த படத்தின் கதை கரு. அஜித் மிக அருமையாக நடித்திருந்தார். அதே நேரத்தில் அதிரடி ஆக்சன் பிளாக்-ஐ விரும்பி சென்ற ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தான் தந்தது. வழக்கமான அஜித் படங்கள் போல இல்லாமல் இருந்தது.
மேலும் மகிழ் திருமேனியின் படம் என்பதால் ரசிகர்கள் வித்தியாசமான அனுபவத்தை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அதனையும் படம் கொடுக்கவில்லை. சுமார் 200 கோடி பட்ஜெட்டில் விடாமுயற்சி படம் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் உலகம் முழுவதும் வெறும் 150 கோடியை மட்டுமே படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விடாமுயற்சி படம் எப்போது வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்தை ஏற்கனவே நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. அந்த வகையில் வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளிலும் படத்தை பார்க்கலாம் என நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வசூல் எவ்வளவு?: பொதுவாக அஜித்குமார் படங்கள் என்றாலே வசூலில் சக்கை போடு போடும். ஆனால் முதல் நாளில் இருந்த வரவேற்பு விடாமுயற்சி படத்துக்கு அடுத்தடுத்த நாட்களில் இல்லை. பிப்ரவரி 6-ம் தேதி வெளியான இந்த படம் முதல் நாளைத் தவிர அடுத்தடுத்த நாட்கள் வசூலை இழந்தது. தற்போது படம் வெளியாகி 18 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் வெறும் 152 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications