திருச்சி சூர்யாவுக்கு எதிராக முக்கிய வீடியோ ஆதாரம் இருக்கு! அதுல என்ன இருக்கு தெரியுமா? அலிஷா பகீர்
சென்னை: என்னிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது. அதில் பல பெண் தலைவர்கள் குறித்து சூர்யா சிவா தவறாக பேசியுள்ளார் என பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார். அந்த வீடியோ குறித்து அமர்பிரசாத் ரெட்டியிடம் கூறினேன். அவர் தலைவர் அண்ணாமலையிடம் தெரிவித்தார். இதையடுத்து திருச்சி சூர்யா சிவாவை அழைத்து இனி அலிஷா இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில்தான் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்கள். அதன் பிறகு எனக்கு திருச்சி சூர்யா போன் செய்வதை நிறுத்திவிட்டார் என்றும் அலிஷா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைகாட்சி சேனலின் பேட்டியில் திருச்சி சூர்யா சிவா, பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து அவதூறாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பாஜகவின் இளைஞரணி மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு ஒரு நாளைக்கு 10 தடவையாவது சூர்யா சிவா போன் செய்து கொண்டே இருப்பார். இதனால் நான் அவரை பிளாக் செய்துவிட்டேன். அதனால் என் மீது தற்போது அவதூறு கருத்துகளை பேசி வருகிறார்.

உடல் அங்கங்கள்
எனது உடை குறித்தும் உடல் அங்கங்கள் குறித்தும் திருச்சி சூர்யா சிவா பேசியதை பார்க்கும் போது அவருடைய வளர்ப்பில் தவறு இருக்கிறது. பொது வெளியில் ஒரு பெண்ணை பற்றி இப்படி பேசியுள்ளார். திருச்சி சூர்யா சிவா பேசியது கேவலமாக இருக்கிறது. அவர் மீது பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அண்ணாமலையிடம் முறையீடு
நான் இந்த சம்பவம் குறித்து மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கூறினேன். அப்போது அவர் எனக்கு தைரியம் கொடுத்தார். பாஜக எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றார். மேலும் சூர்யா சிவா குறித்து ஒரு பிரஸ் மீட் கொடுங்கள் என்றார். அதன்படி நானும் கொடுத்தேன். தற்போது திருச்சி சூர்யா சிவா கட்சியில் இல்லாததால் கட்சித் தலைமை எப்படி நடவடிக்கை எடுக்கும் என தெரியவில்லை.

திருச்சி சூர்யா
திருச்சி சூர்யா சிவா மீது பெரிய அளவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படும். அது போல் அவர் பேட்டி கொடுத்த யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு பிறகு பெண்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் அளவுக்கு யார் பேட்டி கொடுத்தாலும் அதை எடுக்கவே கூடாத வகையில் நடவடிக்கை இருக்கும்.

ஆபாசமாக பேச்சு
என் அலுவலகத்திற்கு திருச்சி சூர்யா சிவா வந்து ஆபாசமாக பேசியது தொடர்பான வீடியோவை நான் எல்லோரிடத்திலும் கொடுக்கவில்லை. இந்த வீடியோ மிகவும் முக்கியமான வீடியோ ஆகும். இதில் நிறைய பெண்கள் குறித்தும் சீனியர் தலைவர்கள் குறித்தும் திருச்சி சூர்யா சிவா தவறாக பேசியுள்ளார். அவர் பேசியதை நான் நிறைய எடுக்கவில்லை. மேலும் முதல்முறையாக அவர் என் அலுவலகத்திற்கு வந்த போது அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை.

அமர்பிரசாத் ரெட்டி
இதன் பிறகு நான் அந்த வீடியோ குறித்து அமர்பிரசாத் ரெட்டியிடம் கூறினேன். அவர் தலைவர் அண்ணாமலையிடம் தெரிவித்தார். இதையடுத்து திருச்சி சூர்யா சிவாவை அழைத்து இனி அலிஷா இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில்தான் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்கள். அதன் பிறகு எனக்கு திருச்சி சூர்யா போன் செய்வதை நிறுத்திவிட்டார்.

மன வருத்தம்
இது போல் திருச்சி சூர்யா சிவா என் மீது தவறாக பேசியது எனக்கு மனம் கஷ்டமாக இருக்கிறது. நான் ஒரு நல்ல குடும்பத்திலிருந்து மதிப்பிற்குரிய பின்னணியிலிருந்து வந்துள்ளேன். எனக்கு விளையாட்டுத் துறையிலும் நல்ல பெயரும் புகழும் இருக்கிறது. ஆனால் அரசியலில் மட்டும் ஒரு பெண்ணை ஏன் இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை. நாம் தைரியமாக இருந்தால் ஆண்கள் நம்மை பற்றி பேச மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டை நான் எடுத்து பிரஸ் மீட் கொடுத்தேன். இவ்வாறு அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications