'நாட்டாமை தீர்ப்ப மாத்துங்க'.. சரத்குமாரின் முடிவிற்கு எதிராக கொந்தளித்த சமக தொண்டர் .. பரபரப்பு
சென்னை: பாஜகவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைக்கும் சரத்குமாரின் முடிவிற்கு எதிராக விழா மேடையிலேயே சமக தொண்டர் ஒருவர், கொந்தளித்தார்.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிடப்போகிறது.. அனேகமாக இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பெரிய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைக்க சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திமுக விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் உள்ளன.
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. பாமக, தேமுதிக இணையுமா இல்லையா என்பது இன்னமும் தெரியவில்லை. பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஓ பன்னீர்செல்வம் அணி, புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவை இணைந்துள்ளன.
பொதுவாக சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது வழக்கம்.. இந்த தேர்தலில் வித்தியாசமாக சிறிய கட்சி ஒன்று பெரிய கட்சி உடன் இணைந்துள்ளது. கூட்டணியாக அல்ல.. கட்சி அப்படியே பாஜகவில் இணைந்துள்ளது. சமீபகாலத்தில் நடந்த பெரிய மாற்றம் இதுதான்..
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பாஜகவுடன் இன்று இணைத்தார். லோக்சபா தேர்தல் நேரத்தில் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்திருப்பது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு மத்தியில் ஒரு சமக தொண்டர் எழுந்து, நாட்டாமை தீர்ப்பை மாற்றுங்க என்பது போல், கொந்தளித்தார். பாஜகவில் சமகவை இணைக்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கொந்தளித்து கோஷம் போட்டதை கண்ட மற்ற தொண்டர்கள் இவரை யார் உள்ளே விட்டது என்று கேள்வி எழுப்பி அவருடன் வாக்குவாதம் செய்தனர்.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனிடையே விழாவில் சரத்குமார் பேசுகையில், "இந்த தேசத்தின் நலனுக்காகவும், நமது வருங்கால இளைய சமுதாயத்தின் நலனுக்காகவும் பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைக்கும் முடிவை நான் எடுத்தேன். இதனை சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசினேன். அவர்கள் எனது முடிவை ஏற்று கொண்டார்கள்..
தலைவர் எவ்வழியோ அவ்வழி என்று தொண்டர்கள் என்னிடம் கருத்தை தெரிவித்தார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் எந்த இடங்களில் , எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது எனக்கு சங்கடமாக இருந்தது. நமது வலிமைக்கு பாஜக உடன் இணைத்தால் என்ன என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அதனால் தான் பா.ஜ.,வுடன் கட்சியை இணைத்துள்ளேன்.
பெருந்தலைவர் காமராஜர் போல் இந்தியாவில் ஆட்சி நடத்தி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த இணைப்பு எழுச்சியின் துவக்கம் , எளிய குடும்பத்தில் பிறந்து நாட்டின் பிரதமராக மோடி வந்திருக்கிறார். நமது சக்தியை மிகப்பெரிய சக்தியுடன் இணைத்துள்ளோம்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications