கண்ணசைத்த மோடி.. தயார் நிலையில் இந்தியாவின் முப்படைகள்.. களமிறங்கிய S -400.. என்னமோ நடக்குது?
சென்னை: பாகிஸ்தானின் பதிலடி தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், இந்தியா பாதுகாப்பு படைகள் சார்பாக பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. நிலம், வான் மற்றும் கடல் எல்லைகளில் தனது பாதுகாப்பை இந்தியா பலப்படுத்தியுள்ளது.
multi-layered air defence network எனப்படும் பல அடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பு முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது போர் விமானங்கள் ரோந்து செல்வது.. ஹெலிகாப்டர்கள் தாழ்வாக ரோந்து செல்வது, ட்ரோன்கள் ஏவுகணைகளுடன் தயாராக இருப்பது, எஸ் 400 போன்ற ஏவுகணை மற்றும் ஏவுகணை மறிப்பு சிஸ்டங்கள் தயார் நிலையில் இருப்பது என்று பல கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

எஸ் 400 களமிறங்கியது
எஸ்-40, கடந்த 1990 ஆண்டிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. அப்போது இது எஸ் - 300 என்று அழைக்கப்பட்டது. ரஷ்ய தயாரிப்பான இது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வந்தது. அதன்பின் 2007ம் ஆண்டில் முழுமையாக ரஷ்ய ராணுவத்தில் செயல்பாட்டிற்கு வந்தது.
இந்த எஸ்-400 ஏவுகணை மற்றும் ஏவுகணை தடுப்பு சிஸ்டம், 4 சிறிய ஏவுகணைகளை தனக்குள் உள்ளடக்கியது. தற்போது உலகில் இருக்கும் ஏவுகணை மற்றும் ஏவுகணை தடுப்பு அமைப்புகளில் மிகவும் வலிமை வாய்ந்தது இதுதான் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 300 டார்கெட்டுகளை தாக்கி அழிக்க முடியும். நான்கும் சேர்த்து வெவ்வேறு திசையில் சென்று தாக்க முடியும். வானத்தில் செல்லும் எதிரிநாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்க கூடியது. அதோடு ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத ஸ்டெல்த் ரக விமானங்களையும் தாக்கி அழிக்க கூடியது. இதை இந்தியா வாங்கும் பட்சத்தில் அது பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் பெரிய பிரச்சனையாக இருக்கும். துல்லியம்தான் இதன் சிறப்பு.
அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் செய்திருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க கூடாது. சில போர் கருவிகள் தவிர (விமானம் போன்றவை) மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை போன்ற கருவிகளை வாங்க கூடாது. இதை மீறி வாங்கினால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இதனால் சீனா மீது ஏற்கனவே அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதையும் மீறி இந்தியா இதை வாங்கி உள்ளது.
கடற்படை தயார்
இன்னொரு பக்கம் அரபிக் கடலில் பெரிய போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன, எல்லையில் உள்ள காலாட்படை பிரிவுகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளன. மேலும் எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்கத் தயாராக உள்ளன.
ஐஏஎஃப் போர் விமானங்களால் போர் விமான ரோந்துகள் பறக்கவிடப்படுவதற்கு மத்தியில், நாட்டின் அணு ஆயுதக் களஞ்சியத்தைக் கையாளும் முப்படையின் தனி பிரிவும் தயார் நிலையில் உள்ளது. அணு ஆயுதங்களை கண்காணிப்பது, உஷார் நிலையில் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
விடுப்புகள் நீக்கம்
நாடு முழுக்க பாரா மிலிட்டரி ராணுவ வீரர்களின் விடுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன. புதிதாக விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே விடுப்பு எடுத்தவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அவரவர் போஸ்டுகளுக்கு உடனடியாக ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுவாக ஒரு நாடு போருக்கு போகும் முன் சில விஷயங்களை கண்டிப்பாக மேற்கொள்ளும்.
தயார் நிலையில் உளவாளிகள்
இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி தரலாம். பாகிஸ்தான் எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முழு முதற் போர் வரும் வாய்ப்புகளும் உள்ளன. இதை கண்டுபிடிக்க, பாகிஸ்தான் செயல்பாட்டை முன்கூட்டியே அறிய உளவுப்படை அவசியம். இதற்காகவே இந்திய உளவு அதிகாரிகள் பாகிஸ்தானில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்தே பயங்கரவாத நடவடிக்கைகளைக் எங்கள் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
போருக்கு தயார்
இன்னொரு பக்கம் நாடு முழுக்க பாரா மிலிட்டரி ராணுவ வீரர்களின் விடுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன. புதிதாக விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே விடுப்பு எடுத்தவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அவரவர் போஸ்டுகளுக்கு உடனடியாக ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுவாக ஒரு நாடு போருக்கு போகும் முன் சில விஷயங்களை கண்டிப்பாக மேற்கொள்ளும். இதனால் இந்தியா நீண்ட போருக்கு தயாராகி வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாறி மாறி மோதல்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்தியா சார்பாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாம்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.
இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை.
இது போக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். பாராமுல்லா, பூஞ்ச், ரசோரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் பலியாகினர். இதில் ஒரு பெண், 2 குழந்தைகள் அடங்குவர். மேலும் 38 பேர் காயமடைந்தனர். இதில் பூஞ்ச் மாவட்டம் தான் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இங்கு 7 பேர் பலியாகி உள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications