தெலுங்கில் பேச சொன்ன ரசிகர்கள்! முடியாது தமிழில்தான் பேசுவேன்! அதிரடி காட்டிய அல்லு அர்ஜுன்
சென்னை: நீங்கள் எல்லாரும் தெலுங்கு பேசும் மக்களாக இருந்தாலும் சென்னையில் இருப்பதால் நான் தமிழில்தான் பேசுவேன். மண்ணின் மொழிக்கு நாம் மரியாதை தர வேண்டும் என அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா தி ரூல் என்ற பெயரில் உருவாகி வருகிறது. சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அல்லு அர்ஜுன் தமிழில் பேசத் தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில் நான் பிறந்த என் மண்ணுக்கு அன்பு வணக்கம் . சென்னை மக்களே! இந்த நாள் மறக்க முடியாத நாள்.
எத்தனையோ வருஷம் இதுக்காக காத்திருந்தேன். ஏனென்றால் கிட்டத்தட்ட 20 ஆண்டு சினிமாவில் இருக்கேன். புஷ்பா படத்தை புரொமோஷன் செய்ய வெளிநாடு , வெளிமாநிலத்திற்கு போனேன்.
ஆனால் சென்னை வரும் போது அந்த உணர்வே வேறு. சென்னையில்தான் நான் வளர்ந்தேன். அங்கிருந்துதான் எல்லாத்தையும் ஆரம்பித்தேன். அதனால் சென்னையோடு உணர்வுபூர்வமான நெருக்கம் எப்போதுமே இருக்கும்.
எனது வாழ்க்கையில் முதல் 20 ஆண்டு சென்னையில்தான் இருந்தேன். அதனால் நான் வாழ்க்கையில் என்ன சாதித்தாலும் எனது அடிதளமாகிய சென்னைக்கு நன்றி சொல்வேன். நான் ஒரு தி. நகர் சென்னை பையன். மேடையில் பேசும் போது அப்பப்போ தமிழ் மறந்துவிடுவேன்.
ஆனால் நண்பர்களுடன் பேசும் போது ஏய், என்னா மச்சான் இவன், ரொம்ப ஓவரா பண்றான்னு சரியாக தமிழை சரளமாக பேசுவேன். நான் புஷ்பா படத்திற்காக 3 ஆண்டுகள் உழைத்துள்ளேன். டிசம்பர் 5 நெருப்பு மாதிரி ஒரு படம் பார்க்க போறீங்க.
நிறைய தடவை சென்னைக்கு வந்திருக்கிறேன். நிறைய நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன். ஆனால் எனது படத்திற்காக தற்போது பேசுகிறேன். என் ஊர்ல (சென்னை) எனக்கு ஒரு ஃபங்ஷன் வேண்டும். அது எனது லைஃப்ல ஒரு அடையாளம் என்றார்.
அப்போது ரசிகர்கள் தெலுங்கில் பேச சொல்லி அல்லு அர்ஜுனிடம் கூறினர். அதற்கு மறுத்த அல்லு பேசுகையில், இந்த இடத்தில் தமிழ்தான் பேச வேண்டும். ஏனென்றால் அது இந்த மண்ணுக்கு நாம கொடுக்கிற மரியாதை.
எந்த மண்ணுல நாம் நிற்கிறோமோ, முடிஞ்ச வரை அந்த மண்ணின் மொழியில்தான் பேச வேண்டும். துபாய் போனால் அரபிக்கில் பேசுவேன். இந்தி பேசும் மாநிலத்திற்கு போனால் இந்தியிலும் , கேரளாவுக்கு சென்றால் மலையாளத்திலும் பேசுவேன் என்றார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications