இந்த பொறப்புதான் நல்லா ருசித்து சாப்பிட கிடைச்சது.. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் இத்தனை வகைகளா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக ஆம்பூர் பிரியாணி திருவிழா மே 13, 14, 15 ஆகிய நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் எத்தனை வகை பிரியாணிகள் வைக்கப்படுகிறது தெரியுமா?

ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, செட்டிநாடு ஸ்பெஷல் பிரியாணி, காரைக்குடி பிரியாணி, ஆற்காடு பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, முகல் பிரியாணி, வேலூர் பிரியாணி என நிறைய ஊர்களுக்கு பிரியாணிகள் பெயர் பெற்றன.

பிரியாணிகளில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு ஊரின் பிரியாணி என்றால் அதற்கு தனி ருசி இருக்கும். சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்பவர்களும் அங்கிருந்து சென்னை வருபவர்களும் ஆம்பூரில் பிரியாணி சாப்பிடுவதற்காகவே தங்கள் பயண நேரத்தை திட்டமிட்டு வருகிறார்கள்.

ஆம்பூர்

ஆம்பூர்

ஆம்பூரில் செய்யும் பிரியாணி சுவைக்கு காரணம் பாலாற்று தண்ணீர் என சொல்லப்படுகிறது. நெல்லை அல்வாவுக்கு தாமிரபரணி தண்ணீரை போல ஆம்பூர் பிரியாணிக்கு பாலாற்று தண்ணீர். மேலும் இந்த சுவைக்கு நிதானமாக எரியும் அடுப்பும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

 ஆம்பூர் பிரியாணி

ஆம்பூர் பிரியாணி

ஆம்பூர் பிரியாணியின் புகழை உச்சத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக ஆம்பூர் பிரியாணி திருவிழா வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது. சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கன்னிகாபுரம் என்ற இடத்தில் வர்த்தக மைய வளாகத்தில் இந்த மாபெரும் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது.

50 ஸ்டால்கள்

50 ஸ்டால்கள்

இதற்கா 50 ஸ்டால்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மட்டன் சிக்கன், மீன் முட்டை பிரியாணி, பாஸ்மதி, சீரக சம்பா, பொன்னி, தம் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என 22 வகையான பிரியாணிகள் சமைக்கப்படுகின்றன. வர்த்தக மையத்திற்கு பொது மக்கள் இலவசமாக செல்லலாம்.

பிரியாணிக்கு விலை

பிரியாணிக்கு விலை

ஆனால் பிரியாணிக்கு அங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை கொண்டு பிரியாணி சாப்பிடலாம். பிரியாணியின் விலை ரூ 100 முதல் 400 வரை விற்பனை செய்யப்படும். தமிழக அரசு சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னிக்கு ஒரு புடி... எல்லாரும் வாங்க.. ஆல்வேஸ் வெல்கம்ஸ் யூ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+