Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸில் கடந்த 37 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தமிழகத்தை சேர்ந்த அமெரிக்கை நாராயணன் கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தியால் அவர் இந்த முடிவை எடுத்துள்ள நிலையில் விலகலுக்கான காரணம் பற்றி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்கை நாராயணன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "பொதுச்சேவை என்பது நோக்கமும் செயலும் ஒன்றுபட்டு இருக்கும்போது மட்டுமே அர்த்தம் பெறுகிறது. நீண்ட கால சிந்தனைக்குப் பிறகு, மக்களுடன் நேரடியாகவும் தன்னிச்சையாகவும் செயல்படும் என் முயற்சி, கட்சியின் தற்போதைய செயல்முறையுடன் இனி பொருந்தவில்லை என்று நான் உணர்ந்துள்ளேன்.

america-narayanan-announces-to-step-away-from-congress

ஒரு அரசியல் கட்சியின் மூலம் பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள், அந்தக் கட்சியின் மூலம் நாட்டிற்கு நான் என்ன செய்தேன்?' என்று தங்களைத் தாங்களே கேட்க வேண்டும்.

அதே நேரத்தில், 'அந்தக் கட்சி நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்கிறதா?

சமூகத்திற்கு உண்மையாக பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு அது அர்த்தமுள்ள வாய்ப்புகளை அளிக்கிறதா? என்பதையும் கேட்க வேண்டும்.

கட்சி என்பது பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு ஆயுதம். அந்த ஆயுதம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடையவில்லை என்றால், அதை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

ஏவுகணை காலத்தில், கையில் கத்தியுடன் களத்தில் நிற்பது முட்டாள்தனமே" எனக்கூறி காங்கிரஸ் கட்சிக்கு 'குட்பை' கூறியுள்ளார்.

அதேவேளையில் தொடர்ந்து பொதுச்சேவையில் ஈடுபட்டு மக்களுடன் சேர்ந்து செயல்படுவேன் என்று கூறியுள்ளார். காங்கிரஸில் இருந்து விலகி உள்ள அமெரிக்கை நாராயணன் 1988 ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது காங்கிரஸில் இருந்து விலகி உள்ள அமெரிக்கை நாராயணன் கடந்த

1988ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1986ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியுடன் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு ஜி. கே. மூப்பனார் முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார்.

1984ஆம் ஆண்டு திரு ராஜீவ் காந்தி தனது நூற்றாண்டு விழா உரையில் அரசியலில் உருவாகும் இடைத்தரகர்கள் குறித்து எச்சரித்தது, அமெரிக்கை வி நாராயணனின் பொதுச்சேவைப் பயணத்தை தீர்மானித்த முக்கிய காரணமாக அமைந்தது. அரசியல் மூலமாக பொதுச் சேவையின் வீரியம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையோடு அவர் அரசியலில் நுழைந்தார்.

கடந்த பல ஆண்டுகளாக, அவர் அடித்தட்டு மக்களுடன் நேரடியாக இணைந்து செயல்பட்டு வருகிறார். வேளச்சேரி நலச்சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவதோடு, அனைத்து கட்சி ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் கவுரவ தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+