LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் - அமெரிக்கா- இஸ்ரேல் போரால் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் வீட்டு, சமையல் எல்பிஜி சிலிண்டர்களின் கையிருப்பு எவ்வளவு உள்ளது என மாநில அரசு கேட்டிருந்தது. அதன்படி 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய கிழக்கில் (குறிப்பாக ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடல்) காரணமாக LPG இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஆண்டுக்கு சுமார் 33 மில்லியன் டன் LPG நுகர்வு செய்கிறது. அதில் உள்நாட்டு உற்பத்தி வெறும் 40% (சுமார் 12-13 மில்லியன் டன்) மட்டுமே. மீதி 60% இறக்குமதி (பெரும்பாலும் மத்திய கிழக்கிலிருந்து) வருகிறது.

lpg tamil nadu

இதனால் வணிக சிலிண்டர்கள் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இந்தியன் ஆயில் வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நேற்று முதல் நிறுத்தியது.

பெங்களூர், கொல்கத்தா, மலப்புரம் போன்ற நகரங்களிலும் வணிக சிலிண்டர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் ஹோட்டல்கள் மூடும் அபாயம் உள்ளது. வணிக சிலிண்டர்கள் தற்போது மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.

வீட்டு உபயோக சிலிண்டர்களை பொருத்தமட்டில் இந்தியன் ஆயில் மற்றும் மத்திய அரசு தரப்பில் தற்போது தட்டுப்பாடு இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால் போர் பதற்றம் காரணமாக மக்கள் பதற்றத்தில் அதிக அளவு முன்பதிவு செய்ததால், இதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒரு சிலிண்டர் டெலிவரி பெற்ற பிறகு அடுத்த சிலிண்டரை 25 நாட்கள் கழித்து மட்டுமே (சில இடங்களில் 21 நாட்கள்) புக் செய்ய முடியும். இது ஹோர்டிங் (அதிக அளவு சேமித்து வைப்பது) தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது.

ரிஃபைனரிகளை LPG உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு, Propane & Butane-ஐ petrochemical-க்கு பதிலாக LPG-க்கு பயன்படுத்த உத்தரவு, LPG-ஐ IOCL, BPCL, HPCL மூலம் மட்டுமே விநியோகிக்க உத்தரவு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் வணிக, வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு உள்ளது என்ற விவரங்களை தமிழக அரசு கேட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது இந்த கையிருப்பு விவரங்களை மார்ச் 10-ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பை ஆய்வு செய்து 20 நாட்களுக்கு தேவையான இருப்பு உள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து "20 நாட்களுக்கு தேவையான சிலிண்டர்கள் உள்ளன. தடையின்றி சிலிண்டர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+