பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்.. அதிமுகவில் விழுந்த முதல் விக்கெட்!
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணி இன்று அமித்ஷா - எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் உறுதியான நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் திடீரென்று இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனால் பாஜகவுடன் கைகோர்த்ததால் அதிமுக கூட்டணியை எஸ்டிபிஐ கட்சி கைகழுவ தயாராகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த 2 கட்சிகளும் வரும் தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள உள்ளன. 2 நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த கூட்டணியை உறுதி செய்தார்.

சென்னையில் இன்று அமித்ஷா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர், பாஜக தலைவர் அண்ணாமலை, புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் இருந்தனர். அப்போது அமித்ஷா, ‛‛2026 சட்டசபை தேர்தலை தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக எதிர்கொள்ள உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாங்கள் தேர்தலை சந்திக்க உள்ளோம்'' என்றார்.
ஸ்டாலினை சந்தித்த நெல்லை முபாரக்
இதன்மூலம் தமிழகத்தில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி என்பது மலர்ந்துள்ளது. இதற்கிடையே தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி பிரிந்து செல்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது தான்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. அந்த கட்சிக்கு திண்டுக்கல் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் இன்று நெல்லை முபாரக் திடீரென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நெல்லை முபாரக் கூறியதாவது:
சந்திப்பு ஏன்?
‛‛அதிமுக கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக், இன்று தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது அவர், வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கும், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்ததற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
"நாடு முழுவதும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டசபையில் அந்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் மசோதாவை தோல்வியடைய செய்யும் வகையில் எதிர்த்து ஓட்டுப் போட்டனர். மேலும் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோசமான மக்கள் விரோத, சிறுபான்மை விரோத வக்ஃப் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கும், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக வாக்களித்ததற்கும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒருபோதும் இந்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று உறுதியாக கூறியதற்காக எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தோம்" என்றார்.
வெளியேறும் எஸ்டிபிஐ?
இருப்பினும் கூட இந்த நெல்லை முபாரக்கின் இந்த சந்திப்புக்கு பின்னால் அதிமுக கூட்டணியில் வெளியேறுவது தான் முக்கிய நோக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் வக்ஃபு மசோதாவுக்கு திமுக முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தது. தீர்மானமும் சில நாட்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால் அப்போது எல்லாம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்காத எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் இன்று காலை சந்தித்துள்ளனர்.
இன்று மாலையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகும். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில் அதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக தான் நெல்லை முபாரக் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இதனால் வக்ஃபு வாரிய சட்ட மசோதா உள்பட பல விஷயங்களில் பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வரும் எஸ்டிபிஐ கட்சி இனி அதிமுக - பாஜக கூட்டணியில் இருக்காது. விரைவில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக பக்கம் சாயலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
எஸ்டிபிஐ அறிக்கை
இதற்கிடையே இன்று மாலையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான பிறகு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அதிமுக எத்தனை காரணங்களைக் கூறினாலும், அவற்றை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தக் கூட்டணிக்குப் பின்னால், மத்திய அரசு பல்வேறு வழிகளில் கொடுத்த அழுத்தம் மற்றும் நெருக்கடியே முக்கிய காரணம் என்பதை அரசியல் புரிந்தவர்கள் மட்டுமின்றி பாமர மக்களும் அறிவார்கள்.
இத்தகைய அழுத்தங்களுக்கு அடிபணிந்து, பாஜகவுடன் கூட்டணி என்கிற தமிழகத்தின் நலனைப் பறிகொடுக்கும் அதிமுகவின் முடிவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாநில உரிமைகளையும், மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உள்ளது. ஆனால், அதிமுகவின் இந்தக் கூட்டணி முடிவு, அந்தக் கடமையை மறந்து, ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடாய் நட்பு கேடாய் முடியும்
"கூடா நட்பு கேடாய் முடியும்" என்பது பழமொழி மட்டுமல்ல, அரசியல் உண்மையும் கூட. பாஜகவுடன் கூட்டணி வைத்த பல மாநிலக் கட்சிகள் இன்றைக்கு அவை தங்கள் அரசியல் அடையாளத்தை இழந்து, மக்களின் நம்பிக்கையைத் தொலைத்து, தோல்வியின் பாதையில் நிற்கின்றன. இந்தக் கூட்டணி மூலம், அதிமுகவும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் பாஜகவுடன் கைகோர்ப்பது, எந்தவொரு மாநிலக் கட்சிக்கும் அழிவைத் தவிர வேறு எதையும் கொண்டுவராது.
தமிழகம் என்பது சமூகநீதி, சமத்துவம், மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு உறுதியாக நிற்கும் மண். பாஜகவின் கொள்கைகள் எப்போதும் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானவை, சமூகநீதிக்கு எதிரானவை, மாநில உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பவை. இத்தகைய பாஜகவை, எந்த வழியில் வந்தாலும், யார் மீது சவாரி செய்து வந்தாலும், எந்த உருவில் வந்தாலும், தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பாஜகவை மட்டுமல்ல, அதன் கூட்டணியையும் தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் அதிமுக கூட்டணிக்கு குட்பை சொல்லிவிட்டார் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
புதுச்சேரி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு.. முடிவுக்கு வருமா தொகுதி பங்கீடு?












Click it and Unblock the Notifications