மிரட்டும் கொரோனா.. மருத்துவமனைகளில் துவங்கிய அவசரகால ஒத்திகை.. காஷ்மீர் டூ கன்னியாகுமரி வரை அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனாவில் ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் 4 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து முன்னெச்சரிக்கை பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான அவசரகால ஒத்திகை துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் டாக்டர்கள், நர்சுகளுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

சீனாவில் கடந்த 2019 இறுதியில் கொரோனா பரவல் தொடங்கியது. இது அங்கிருந்து பல நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியது.

கொத்து கொத்தாக மக்கள் இறந்த நிலையில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். இந்நிலையில் தான் கடந்த 8 மாதங்களாக கொரோனா பாதிப்பு பல நாடுகளில் கட்டுக்குள் வந்தது.

சீனாவில் கொரோனா பாதிப்பு

சீனாவில் கொரோனா பாதிப்பு

இந்நிலையில் தான் தற்போது சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸால் அங்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு, உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. ஆனால் சீனா கொரோனா பாதிப்பு, பலி பற்றிய தகவல்களை மறைத்து வருகிறது. அதேபோல் ஜப்பான், தென்கொரியா, பிரான்சு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

இந்தியாவிலும் பாதிப்பு

இந்தியாவிலும் பாதிப்பு

இதற்கிடையே தான் உருமாறிய ஓமிக்ரான் பிஎப் 7 வகை கொரோனா இந்தியாவிலும் 4 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, பிரதமர் மோடி ஆகியோர் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுகரைகளை மாநில அரசுகளுக்கு வழங்கி உள்ளனர். விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மீண்டும் துவங்கி உள்ளது.

நோய் தடுப்பு ஒத்திகை

நோய் தடுப்பு ஒத்திகை

இந்நிலையில் தான் நோய்த்தடுப்பு ஒத்திகையை மேற்கொள்ள மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி இந்தியா முழுவதும் இன்று மருத்துவ ஒத்திகை நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் பற்றி இன்று ஆய்வு செய்யப்பட உள்ளது. அதன்படி தனிமை படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு, தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள், வெண்டிலேட்டர் கையிருப்பு, டாக்டர்கள், ஆயுஷ் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த கொரோனா கால அவசர ஒத்திகை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 இந்தியா முழுவதும் துவங்கிய ஒத்திகை

இந்தியா முழுவதும் துவங்கிய ஒத்திகை

இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் உரிய முறையில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்க முடியும் என மத்திய, மாநில அரசுகள் நம்புகின்றன. மேலும் இந்த ஒத்திகையின்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை, மருத்துவ உபகரணங்களை கையாளும் முறை உள்ளிட்டவை பற்றியும் விளக்கம் கொடுக்கப்பட உள்ளது. அதன்படி இந்தியா உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு அவசர கால ஒத்திகை துவங்கியது.

 சென்னையில் துவக்கம்

சென்னையில் துவக்கம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு தொடர்பான ஒத்திகையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் துவங்கி வைத்தனர். இதுபற்றி மா சுப்பிரமணியன் கூறுகையில், ‛‛கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயாராகி வருகிறது. அனைத்து மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை 24 மணிநேரத்தில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொடர்பான கட்டமைப்பை இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்க அறிவுரை வழங்கி உள்ளோம் '' என்றார். இதேபோல் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் இந்த ஒத்திகை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+