“முஸ்லிம்” மாப்பிள்ளை.. “இந்து” மணப்பெண் - டிரெண்டாகும் அமீர், பாவ்னி “திருமண” ஆல்பம் பாடல் வீடியோ
சென்னை: விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 5 வது சீசன் மூலமாக பிரபலமான நடன கலைஞர் அமீரும், நடிகை பாவ்னியும் திருமணம் செய்துகொள்வதை போன்று தயாரிக்கப்பட்டு உள்ள ஆல்பம் பாடல் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. இதில் குறிப்பாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆண்டுக்கு 106 நாட்கள் ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் ராஜு வெற்றிபெற்றார்.
ராஜு வெற்றிபெற்றாலும் இதில் அதிகம் பிரபலமடைந்த இருவர் அமீர் மற்றும் பாவ்னி. தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை பாவ்னிக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இந்த போட்டியின் பாதியில் கலந்துகொண்ட டான்ஸ் மாஸ்டர் பாவ்னி இறுதி சுற்று வரை முன்னேறி ரசிகர்களை கவர்ந்தார்.

காதல் சக்சஸ்
இந்த போட்டியிலேயே தன்னை விட வயது அதிகமான பாவ்னியிடம் அமீர் காதலை வெளிப்படுத்த தொடக்கத்தில் பலரும் அது உண்மை என்று நம்பவில்லை. பாவ்னியும் விளையாட்டாகவே எடுத்துக் கொண்டார். ஆனால், போகப்போக அமீர் உண்மையாக காதலிப்பதை பாவ்னியும் சக போட்டியாளர்களும் ரசிகர்களும் புரிந்துகொண்டனர். பிக் பாஸ் போட்டி முடிந்த பிறகும் அமீர் - பாவ்னி இருவரும் பல்வேறு பேட்டிகள், நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டனர்.

பிக் பாஸ் ஜோடி
அந்த சமயத்தில்தான் பிக் பாஸ் ஜோடிகள் சீசனை விஜய் டிவி நடத்தியது. இதில் அமீரும் பாவ்னியும் ஒரு ஜோடியாக போட்டியிட்டனர். அதில் அவர்களின் நடனத்தை கடந்து அமீர் பாவ்னியிடம் பலமுறை காதலை வெளிப்படுத்த முயலும் காட்சிகள் பிரபலமாகின. இறுதிப்போட்டியில் அமீர் - பாவ்னி ஜோடி வெற்றிபெறவே கடைசியாக, அமீரின் காதலுக்கு பாவ்னி சம்மதம் தெரிவித்தார்.

செந்தாமரை பாடல்
இந்த நிலையில் இருவரும் இணைந்து நடித்துள்ள "செந்தாமரையே" ஆல்பம் பாடல் இன்று யூடியூபில் வெளியாகி இருக்கிறது பிரபலமாகி இருக்கிறது. ஸ்ரீகாந்த் சீகா வரிகளில், சத்ய பிரகாஷ் குரலில் ஜெரால்டு மற்றும் ஏகே சசிதரன் இசையமைத்து வெளிவந்திருக்கும் இப்பாடல் வெளியான மூன்றே மணி நேரத்தில் 3 லட்சம் பார்வையாளர்களையும், 36 ஆயிரம் லைக்குகளையும் பெற்று உள்ளது.

இந்து - முஸ்லிம் திருமணம்
இந்த பாடலில் அமீர் இஸ்லாமியர்போல் தொப்பி, குர்தா அணிந்தும், பாவ்னி இந்து மணப்பெண்போல் உடையலங்காரம் செய்தும் இரு மத முறைப்படி திருமணம் செய்வதைபோல் காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இப்பாடல் காட்சிகள் இருப்பதாகவும், மதத்தை விட காதல் முதன்மையானது எனவும் கருத்திட்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications