சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் அமித்ஷா சொன்ன “மேட்டர்”.. அதிமுகவை மதிக்கல! எம்ஜிஆர், ஜெ. நிலைதான் - சுந்தர்ராஜன் ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருப்பதன் மூலம் அவர் அதிமுகவை மதிக்கவில்லை என்று தெரிவதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் தெரிவித்து உள்ளார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நேற்ரு நடைபெற்ற இந்த பவள விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. அதன் பின்னர் தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்துக்கு அவர் சென்றார்.

12 ஆண்டுக்கு முன்பே செய்த கருணாநிதி.. நேற்று அண்ணாமலை சொன்னதை பேசிய அமித்ஷா! வரலாறு சொல்வது இதான் 12 ஆண்டுக்கு முன்பே செய்த கருணாநிதி.. நேற்று அண்ணாமலை சொன்னதை பேசிய அமித்ஷா! வரலாறு சொல்வது இதான்

 10% இடஒதுக்கீடு

10% இடஒதுக்கீடு

அதே நாளில் உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக நேற்று தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்தது. 10% இடஒதுக்கீட்டுக்கு தங்கள் கட்சி ஆதரவளிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

 பூவலகு சுந்தர்ராஜன் ட்வீட்

பூவலகு சுந்தர்ராஜன் ட்வீட்

இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான சுந்தர்ராஜன், "அரியவகை ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டில் அதிமுக எடுத்துள்ள நிலைப்பாடு, சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம்.

 எம்ஜிஆர், ஜெயலலிதா

எம்ஜிஆர், ஜெயலலிதா

எம்ஜியார் இதை நடைமுறைப்படுத்த முயன்ற போது தேர்தலில் தோற்றுப்போனார். இந்த மண்ணிற்கு சம்மந்தம் இல்லாத "மதமாற்று தடைச் சட்டத்தை" ஜெயலலிதா கொண்டுவந்த சில மாதங்களில் நடைபெற்ற தேர்தலில் தோற்றுப் போனார். அதன் பிறகு வாபஸ் வாங்கினார்.

 அமித்ஷா பேச்சு

அமித்ஷா பேச்சு

இப்போது அதிமுக எடுத்துள்ள நிலைப்பாடு பாஜக எடுத்துள்ளதைப் போன்றது. அப்படியெனில் எதற்காக மக்கள் அதிமுக என்கிற கட்சியை தேடப்போகிறார்கள்? இதன் தொடர்ச்சியாகதான், நேற்றைக்கு உள்துறை அமைச்சர் அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றுள்ளார். அவர் அதிமுகவை மதிப்பவராக இல்லை என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

 மண்ணிற்கான அரசியல்

மண்ணிற்கான அரசியல்

யாருடைய வெற்றிடத்தை யார் நிரப்புகிறார்கள் என்பதை அதிமுக புரிந்துகொள்ள வேண்டும். உயர்சாதியில் பிறந்திருந்தாலும், ஜெஜெவால் சர்வவல்லமை படைத்திருந்த ஜெயந்திரரை கைது செய்ய முடிகிறது என்றால் அதுதான் இந்த மண்ணின் அரசியல். இந்த மண்ணிற்கான அரசியல் எனபதை அதிமுக புரிந்து நடக்கவேண்டும்.

 பாஜகவிலிருந்து விலக வேண்டும்

பாஜகவிலிருந்து விலக வேண்டும்

அக்கட்சியின் அனைத்து பிரிவுகளும் சிக்கல்களை மறந்து ஒன்றிணைந்து, பாஜகவுடன் கூட்டணியை உடைத்து செயல்படுவதுதான் அந்த கட்சிக்கு நல்லது." என்று பதிவிட்டு இருக்கிறார். அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உட்கட்சிப்பூசல் தொடர்ந்து வருகிறது.

 மோடியுடன் சந்திப்பு

மோடியுடன் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று முந்தினம் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒன்றாக சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Poovulagin Nanbargal Sundarrajan said that Union Home Minister Amit Shah's said that the BJP will rule in Tamil Nadu in 5 years shows that he does not respect the AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X