விடாமல் முயன்ற அமித் ஷா.. ஈகோ போகாத எடப்பாடி.. டிடிவி தினகரன் வெளியேறும் முன்.. நடந்தது என்ன?
சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பிற்கு பின் முக்கியமான சில விஷயங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இப்போது ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

டிடிவி தினகரன் பாஜக கூட்டணி வெளியேற்றம்
டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பில், இனியும் காத்திருப்பது சரி அல்ல. சிலரின் துரோகத்தால் தான் கட்சி ஆரம்பித்தோம். துரோகம் செய்தவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் திருந்தவில்லை . அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை என்று தெரிந்துவிட்டது.
இனியும் காத்திருப்பது சரி அல்ல, எங்களின் வழியில் செல்கிறோம். ஆணவம், அகங்காரம் பிடித்து சவுண்ட் பார்ட்டி போல் செயல்படுகிறார் (இபிஎஸ்). டிசம்பரில் யாருடன் கூட்டணி என்று சொல்கிறோம். திருந்துவார்கள் அல்லது திருத்துவார்கள் என எண்ணினோம், அதற்கு வாய்ப்பில்லை, நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம்
அமித் ஷாவின் பிளான் தோல்வி அடைந்துவிட்டது. என்டிஏ கூட்டணி தொடர்பாக அமித் ஷா போட்டிருந்த பிளான் தோல்வியில் முடிந்துவிட்டது, என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்து உள்ளார்.
அமித் ஷா - டிடிவி தினகரன் பிளான்
இதில் அமித் ஷா பிளான் என்று டிடிவி தினகரன் கூறுவது ஒருங்கிணைந்த அதிமுக அல்லது அதிமுக கூட்டணியை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். டிடிவி தினகரனை எடப்பாடி உடன் ஒன்றாக மேடை ஏற்ற டெல்லி முயன்றது. இவர்கள் சமாதானமாக செல்ல வேண்டும் என்று டெல்லி முயன்றது. ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளவில்லை. டிடிவி தினகரனை சந்திக்க கூட எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.
இவர்கள் ஒன்றாக இருந்தால் மட்டுமே அடிமட்டத்தில் அது வாக்குகளாக மாறும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு தயாராக இல்லை. அவருக்கு இந்த விவகாரத்தில் ஈகோ இருந்ததாக கூறப்படுகிறது. அமித் ஷா பேசியும்கூட எடப்பாடி பழனிசாமி இறங்கி வரவில்லை. ஓ பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் - சசிகலா - எடப்பாடி பழனிசாமி இவர்களை ஒரே மேடையில் ஏற்ற வேண்டும்.
இதன் மூலம் முக்குலத்தோர் வாக்குகளை மீண்டும் பெற வேண்டும். இப்போது கொங்கு கட்சி என்ற பிம்பம் அதிமுகவிற்கு உள்ளது, எடப்பாடி செயலால் ஒரு குறிப்பிட்ட சாதியின் கட்சி என்ற பிம்பம் அதிமுகவிற்கு உள்ளது. இதை போக்க ஓ பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் - சசிகலா - எடப்பாடி பழனிசாமி இவர்களை ஒரே மேடையில் ஏற்ற வேண்டும் என்ற திட்டம் அமித் ஷாவிற்கு இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இவர்களுடன் இணைய மறுத்து தனிப்பட்ட ஈகோ காரணமாக போட்ட முட்டுக்கட்டைகள்தான் ஓ பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து வெளியேற காரணமாக அமைந்தது. அதே ஈகோதான் இப்போது எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இருந்து வெளியேறவும் காரணமாக அமைந்துவிட்டது என்கிறார்கள் விவரம் அறிவித்தவர் .
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications