தண்ணி காட்டும் விஜய்..என்டிஏ கூட்டணி என்ன செய்யும்? அமித்ஷா கையில் ப்ளான்-பி.. களமிறங்கும் ஆர்எஸ்எஸ்
சென்னை: விஜய் கூட்டணிக்கு வருவார் என அதிமுக பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அவர் அதற்கு துளியும் வாய்ப்பில்லை எனவே சொல்லப்படுகிறது. இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு பாஜக தீவிரமான கணக்கீடுகளை செய்து வருகிறது. குறிப்பாக, தவெக விஜய் கூட்டணியில் இணையாமல் இருந்தால், பாஜக கட்சியின் மாற்றுத் திட்டம் என்ன? என்பதும், அதற்காக அமித் ஷா தயாரித்து வைத்துள்ள மாற்றும் திட்டங்கள் குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்த பாஜகவும் அதிமுகவும் கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என முயற்சித்து வருகின்றன. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை அதிமுக கூட்டணிக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் விருப்பம். கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பார்த்து கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டுவிட்டது என உற்சாகமாக பேசினார் எடப்பாடி.

என்.டி.ஏ கூட்டணி
ஆனால் பாஜக இருக்கும் அணியில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழக வெற்றி கழகம் தெளிவாக சொல்லிவிட்டது. இந்த நிலையில் விஜய் கூட்டணிக்கு வராவிட்டால் அமித்ஷா கையில் மாற்றுத்திட்டங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தமிழகத்தில் சரியான கூட்டணியும் தேர்தல் மேலாண்மையும் இருந்தால் பாஜக 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியும் என சொல்லப்பட்டு இருக்கிறது. அதாவது கடந்த மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது பல தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
2026 தேர்தல் திட்டம்
மேலும் சில தொகுதிகளில் திமுகவை விட அதிக வாக்குகள் பாஜக கூட்டணிக்கு கிடைத்தது. இதை அடுத்து அதை மனதில் கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் அந்த தொகுதிகளில் கவனம் செலுத்த பாஜக தலைமை முடிவு எடுத்திருக்கிறது. மேலும் இதுவரை தமிழகத்தில் ஆர்எஸ்எஸின் பங்கு இல்லாத நிலையில் இந்த தேர்தலில் அதனையும் துணைக்கு அழைத்துக் கொள்ள பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. மேலும் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட ஆன்மீக தலங்கள் இருக்கும் தொகுதிகளில் பாஜக கூடுதல் கவனத்தை செலுத்த இருக்கிறது.
அமித்ஷா திட்டம்
அதே நேரத்தில், அமித் ஷா தமிழகத்தில் பெரிய கூட்டணியை உருவாக்கும் முனைப்பில் உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோருடன், விஜயுடன் சந்திப்புகள் நடைபெற வாய்ப்பு அதிகம் என்கின்றனர் பாஜகவினர்.
விஜய் அரசியல்
இதில் மிக முக்கியமானது, தவெகவை கூட்டணிக்குள் ஈர்ப்பதற்கான முயற்சி. விஜய் தலைமையில் தவெக தனியாகப் போட்டியிட்டால், திமுக மற்றும் காங்கிரஸ் சார்ந்த சிறுபான்மை வாக்குகளில் பிளவு ஏற்பட்டு அவர்களுக்கு பாதகமாக மாறும் என பாஜக நினைக்கிறது. குறிப்பாக மைனாரிட்டி வாக்குகள் பிளவு அடைந்தால், திமுக கூட்டணிக்கு நேரடியான பாதிப்பு ஏற்படும் என்பதால், தவெக தனித்து போட்டியிடுவதைக் கூட பாஜக ஒரு தந்திரமாகவே பார்க்கிறது.
பாஜக பி-பிளான்
தவெக கூட்டணிக்கு வரவில்லை என்றால், அதற்கு மாற்று "B-Plan" ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருக்கிறது என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் தலைமையில் வேறு சில கூட்டணியில் சேர்ந்துவிட்டால், அது மற்ற கட்சிகளின் வாக்குகளை திசைதிருப்பும் ஆற்றல் கொண்டது என்பதால், தவெக மிகப்பெரிய கூட்டணி யை உருவாக்குவதை தடுப்பதில் பாஜக அதிக கவனம் செலுத்துகிறது.
திமுக அமைச்சர்கள் ஃபைல்ஸ்
இதே நேரத்தில் பாஜக அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் இடையே பனிப்போர் நீடிப்பதையும் கவனிக்க வேண்டும். தலைமை மாற்றப்பட்டதிலிருந்து ஏற்பட்ட இந்த கோல்ட் வார் நிலையை அமித் ஷா சீரமைக்க முயற்சி செய்து வருகிறார். அதிமுக தரப்பிலும் அதிரடி நகர்வுகள் நடந்து வருகின்றன. முக்கிய திமுக அமைச்சர்கள் குறித்து இருக்கும் புகார்கள், வழக்குகள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட பல "ஃபைல்ஸ்" எடப்பாடி பழனிசாமி மூலம் பாஜக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் பல தொகுதிகளில் பொறுப்பில் இருக்கும் நிலையில், அவர்களை வழக்குகள் மூலம் அழுத்தத்தில் வைத்தால், அவர்கள் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட முடியாது என்பதே அமித்ஷாவின் முக்கிய திட்டம் என்கின்றனர்.
-
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications