அமித் ஷாவுக்கு மோடியின் 3 அசைன்மெண்ட்! ஏக குஷியில் ஓபிஎஸ் - டிடிவி! எடப்பாடிக்கு செக்.. அப்போ பாமக?
சென்னை: பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று மதுரைக்கு வருகிறார். அவரது வருகையின் போது மூன்று முக்கிய அசைன்மென்ட் இருப்பதாகவும், டெல்லி செல்வதற்கு முன் எடப்பாடி, ஓபிஎஸ், பாமக தரப்பு முக்கிய புள்ளிகளை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக தமிழத்தின் ஆளும் கட்சியாக திமுக தேர்தலுக்கு எப்போதோ தயாராகிவிட்டது. மாவட்ட அளவில் ஏற்கனவே அமைச்சர்கள் தேர்தல் பணிகளை துவக்கி விட்டனர். மேலும் பொறுப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என முதல்வர் ஸ்டாலினும் ரோட் ஷோ, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ஆய்வு என இறங்கி அடித்து வருகிறார். 2019 முதல் திமுக கூட்டணி இருக்கும் கட்சிகளே இந்த தேர்தலிலும் களம் இறங்குகின்றன. கூடுதலாக சில கட்சிகள் வரலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்த அதிமுகவும் பாஜகவும் இந்த முறை கூட்டணி அமைத்திருக்கின்றன. தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என நினைக்கும் பாஜக அதிமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டது. ஆனால் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை பார்த்து பாடம் கற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் 'சில பல' அரசியல் நடவடிக்கைகளுக்கு பிறகு பாஜக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார் அதே நேரத்தில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் சேர்க்கக் கூடாது என்ன திட்டவட்டமாக சொன்னதாக கூறப்படுகிறது. அதனால் தான் கடந்த முறை அதிமுக பாஜக கூட்டணி அறிவிப்பு நிகழ்ச்சியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் வரவில்லை. இந்நிலையில் டெல்லிக்கு சென்ற அமித்ஷாவிடம் தங்கள் தரப்பு குறைகளை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் எடுத்து சொன்னதாக சொல்லப்படுகிறது.
மேலும் தமிழக பாஜக புள்ளிகள் மூலம் டெல்லி தரப்புக்கு தூதுவிட்டு இருக்கின்றனர். கடந்த முறை அதிமுக கழட்டிவிட்ட நிலையில் தேனி, ராமநாதபுரத்தில் இரண்டாவது இடத்திற்கு வந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதை அடுத்து அவர்களையும் கூட்டணியில் இணைக்க திட்டமிட்டுள்ளார் அமித் ஷா. இந்த நிலையில் இன்று மதுரை வரும் அமித் ஷா ஓபிஎஸ், டிடிவி, எடப்பாடி பாமக தரப்பு நிர்வாகிகளை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தேமுதிகவையும் தங்கள் வழிக்குக் கொண்டு வருவது தான் அமித் ஷாவின் அசைன்மென்ட் என்கின்றனர். கடந்த முறை அமித்ஷா தமிழகம் வந்த போது பாமக கூட்டணியையும் உறுதி செய்வதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக ராமதாஸ் அறிக்கை விட்டு பாஜக கூட்டணி கனவில் மண்ணள்ளிப் போட்டார். இந்த நிலையில் தான் பாஜக தரப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாஸை சந்தித்து பேசிய நிலையில் பாமகவும் கூட்டணிக்கு வரும் என்கின்றனர். மேலும் ராமதாஸ் அன்புமணி ராமதாசை மதுரை சந்திக்க வைக்கும் திட்டமும் இருக்கிறதா. இதற்கான பணிகளும் நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டதற்கு பிறகு நாளை இரவு அல்லது பகலில் ஓபிஎஸ், டிடிவி, பாமக தரப்பு நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்து பேசலாம் என்கின்றனர். அந்த வகையில் அமித் ஷாவின் இந்த வருகையின் போது ஓபிஎஸ் டிடிவி தினகரன் கூட்டணியில் இருப்பதை உறுதி செய்வது, பாமகவை கூட்டணிக்கு அழைத்து வருவது, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது ஆகிய மூன்று முக்கிய அசைன்மென்ட் இருப்பதாகவும். மேலும் தமிழக பாஜகவில் தற்போது நடைபெற்று வரும் மோதல்கள் குறித்தும் விசாரித்துள்ள அமித் ஷா, அது தொடர்பாக நிர்வாகிகளை கண்டிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
-
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா?












Click it and Unblock the Notifications