ஆரம்பிச்சிடுச்சு திமுக.. "ரொம்பவும்"தான்.. முதல்வர் ஸ்டாலின் இதை மறக்ககூடாது.. டிடிவி தினகரன் சுளீர்

முதல்வர் ஸ்டாலினை டிடிவி தினகரன் விமர்சித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பக்கம் "ரொம்பவும்" அரசியல் நாகரீகம் வாய்ந்தவராக தன்னை காட்டிக்கொள்ள,'அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்' என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவரது அரசு அதற்கு நேர் எதிராக செயல்படுகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. அத்துடன் மக்களை ஈர்க்கும்வகையான செயல்பாடுகளையும் செய்து வருகிறது.

எனினும் அதிமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.. குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக மீதான விமர்சனங்களை தினந்தோறும் முன்வைத்து வருகிறார்.

அறிக்கை

அறிக்கை

அந்த வகையில், அதிமுகவின் திட்டங்கள் முடக்கப்படுவதற்கும், பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருவதற்கும் எதிர்ப்புகளை தெரிவித்தார்.. அது சம்பந்தமாக ஒரு அறிக்கையையும் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.. அதில், "ஆடத்தெரியாத ஒருவர் கூடம் கோணல்" என்று சொல்வது போல், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றத் தெரியாத இந்த அரசு, நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி, அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா கண்டு வருகிறது.

 நிதி ஆதாரம்

நிதி ஆதாரம்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதி ஆதாரத்தைப் பெருக்கவும் இரண்டு வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் என்ன செய்கின்றன? அரசுக்கு என்னென்ன ஆலோசனைகள் வழங்கின? என்றே தெரியவில்லை... மக்கள் நல அரசு என்றால் மக்களின் நலனைக் காக்கும் அரசு. ஆனால் இந்த அரசோ மக்களின் நலத்திட்டங்களைப் பறிக்கும் அரசாக உள்ளது" என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

உணவகம்

உணவகம்

இதில் பெரிதும் இப்போது வரை பேசப்பட்டு வருவது அம்மா உணவகம்தான்.. கலைஞர் உணவகம் கொண்டு வந்தவுடன், அம்மா உணவகம் மூடப்பட்டுவிடுமோ என்ற கலக்கம் அதிமுக தலைவர்களிடம் இருந்து வருகிறது.. ஓபிஎஸ் இதை வெளிப்படையாகவே அறிக்கை விட்டு தெரிவித்து விட்டார்.. ஆனால் செல்லூர் ராஜு மட்டும், கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்போம் என்று பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டி அதிமுகவுக்கு மேலிடத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது வேறு விஷயம்.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இப்போது இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.. மக்கள் நலத்திட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் பெயரை திமுக அரசு சத்தமின்றி இருட்டடிப்பு செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.. இது தொடர்பாக 4 ட்வீட்களை அடுத்தடுத்து பதிவிட்டு திமுக அரசை காட்டமாக விமர்சித்து கேள்வி எழுப்பி உள்ளார்.. அந்த ட்வீட்கள் இவைகள்தான்:

 இருட்டடிப்பு

இருட்டடிப்பு

மக்கள் நலத்திட்டங்களில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வேலைகளை சத்தமில்லாமல் தி.மு.க அரசு மேற்கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. ஏழை,எளிய மக்கள் பசியாறுவதற்காக அம்மா அவர்கள் கொண்டுவந்த அம்மா உணவகங்களை சீர்குலைப்பதற்கான வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்ட தி.மு.க அரசு, அவற்றை மொத்தமாக மூடுவதற்கு திட்டமிட்டு கருணாநிதி பெயரில் உணவகங்களை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ட்வீட்கள்

ட்வீட்கள்

ஒரு பக்கம் "ரொம்பவும்" அரசியல் நாகரீகம் வாய்ந்தவராக தன்னை காட்டிக்கொள்ள,'அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்' என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவரது அரசு அதற்கு நேர் எதிராக செயல்படுகிறது. இப்போது 'அம்மா மினி கிளினிக்'கையும் பெயர் மாற்றம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தி.மு.கவும் திரு.ஸ்டாலினும் மறந்துவிடக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+