சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லட்சம்லாம் இல்லை.. ஸ்ட்ரெய்ட்டா கோடிதான்.. தூத்துக்குடி அமமுக வேட்பாளர் பேட்டியால் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன், அத்தொகுதியில், ஒன்றரை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி, அதிமுக கூட்டணியில், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் ஸ்டார் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் அமமுக சார்பில் வேட்பாளராக புவனேஸ்வரன் களமிறக்கப்பட்டுள்ளார்.

AMMK Tutiorin candidate press meet leads laughing

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட புவனேஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களையெல்லாம் சந்தித்துவிட்டு வந்தபிறகு என்னுடைய கணிப்புப்படி, எங்கள் கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கணிப்புப்படி சுமார் ஒன்றரை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழியை தோற்கடிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிலம் நீச்செல்லாம் இல்லை.. 64 லட்சம் ரூபாய்க்கு கடன்தான் இருக்கு.. இளங்கோவன் டிக்ளேர்நிலம் நீச்செல்லாம் இல்லை.. 64 லட்சம் ரூபாய்க்கு கடன்தான் இருக்கு.. இளங்கோவன் டிக்ளேர்

இதைக் கேட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் ஆரவாரத்துடன் கைதட்டினர். அதன் பிறகுதான், தப்பை உணர்ந்த பக்கத்தில் இருந்த ஒரு நிர்வாகி, தூத்துக்குடி தொகுதியில் மொத்த வாக்குகள், 14 லட்சம். ஆனால், நீங்க ஒன்றரை கோடி என கூறிவிட்டீர்கள் என காதில் கிசுகிசுத்தார்.

இதைக் கேட்டுக்கொண்ட, புவனேஸ்வரன், மன்னித்து விடுங்கள், 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என கூறினார். இதனால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.

English summary
AMMK candidate says, he will win by 1.5 crores votes in Tutiorin, which leads laughing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X