சென்னையில் திடீரென லீக்கான அம்மோனியா வாயு..மூச்சுத்திணறலால் மக்கள் அவதி-தொடர் விபத்துகளுக்கு தீர்வு?

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை காசிமேட்டில் ஐஸ் பேக்டரியில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே மீனவர்கள் பயன்பாட்டுகாக ஏரளாமான ஐஸ் பேக்டரிகள் உள்ளன. இங்குள்ள ஆலைகளில் சுமார் 50 ஊழியர்கள் பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள ஆலையில் அமோனியா வாயு சிலிண்டரில் கூலிங் ஆயிலை ஊழியர் ஒருவர் நிரப்பினார். அப்போது சிலிண்டரில் உள்ள வால்வு பகுதியில் இருந்து திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.

Ammonia gas leak at the Chennai Ice Factory caused suffocation to the public in the area

இதனால் காசிமேடு சூரியன் நாராயணன் சாலை, பூண்டி தங்கமாள் தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த காசிமேடு மின்பிடி துறைமுக போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து ராயபுரம் தீயணைப்பு துறையினர் வந்து அமோனியா வாயு சிலிண்டரை தண்ணீரை பீய்ச்சியடித்து கசிவை சரி செய்தனர். இந்த சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் ஐஸ் கம்பெனி உதவி மேலாளர் என்பவரை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். ஐஸ் பேக்டரியில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+