அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு.. தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!
சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். இதற்கான 7வது சுற்று பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் சிஐடியூ செயலாளர் சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகித ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்து
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பது இனி நான்காண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்து ஊழியரான ஓட்டுநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.2012 ஆகவும், அதிகபட்சமாக ரூ.7,981 ஆக நிர்ணயிக்கப்பட்டு கையெழுத்தானது. அதே போல நடத்துநருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,965, அதிகபட்சமாக ரூ.6,640-க உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சிஐடியூ வெளிநடப்பு
அதேபோல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு ரூ.9,329 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பதை சிஐடியு, ஏஐடியுசி சங்கங்கள் ஏற்கவில்லை. பேச்சுவார்த்தையில் 60 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் ஒப்பந்தம் இறுதி செய்ததை சிஐடியு, ஏஐடியுசி ஏற்கவில்லை. தொடர்ந்து ஊதிய உயர்வு தொடர்பான 90 சதவிகித பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுவிட்டது.

நாளை ஆர்ப்பாட்டம்
ஒப்பந்தக் காலத்தை 3 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தவும், கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற 21 வேலை நிறுத்த நாட்களை பணி நாளாக மாற்றி ஊதியம் வழங்க மறுத்ததை கண்டித்தும் பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இந்த பாதக அம்சத்தை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் சிவசங்கர்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ஓய்வூதிய குடும்பத்தினருக்கு இலவச பயண சலுகை வழங்கப்படும். பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லடசத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு நிதியாக பணி ஒன்றுக்கு ரூ.300 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications