சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூக்கில் ட்யூப்.. "ஊ சொல்றியா மாமா.." பாட்டி வாயிலிருந்து வந்த முனகல்! ஆச்சரியத்தில் ஆழ்த்திய வீடியோ

பாசிட்டிவ் எனர்ஜிக்காக பாட்டி பாடும் வீடியோ வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. உயிருக்கு போராடும் வயதான பாட்டி ஒருவர், மருத்துவமனையில் செய்த காரியம், பலருக்கும் வியப்பை தந்து வருகிறது.

Recommended Video

    மூக்கில் ட்யூப்.. ஊ சொல்றியா மாமா.. பாட்டி வாயிலிருந்து வந்த முனகல்! ஆச்சரியத்தில் ஆழ்த்திய வீடியோ

    பிற நாட்டு சினிமாக்களிலிருந்து வேறுபட்டதுதான் இந்திய சினிமா.. இந்த வேறுபாடுக்கு காரணம், அவைகளில் இடம்பெறும் பாட்டுக்கள்தான் என்பதை உறுதியாக சொல்லலாம்.

    சினிமாவில், பாடல்களுக்கான இடங்கள் இன்றுவரை முக்கியத்துவத்தை இழந்துவிடாததற்கு காரணமே, தனி மனித தாக்கங்கள் அதில் நிறைந்து காணப்படுவதுதான்.. இதில் தென்னிந்திய பாடல்கள் கூடுதல் வலிமை நிறைந்தவை

    நடுராத்திரி வீடியோ போட்ட அதிமுக பூங்கொடி.. திமுகவுக்கு தந்த திடீர் ஆதரவு.. எம்எல்ஏ மீது பகீர்..!நடுராத்திரி வீடியோ போட்ட அதிமுக பூங்கொடி.. திமுகவுக்கு தந்த திடீர் ஆதரவு.. எம்எல்ஏ மீது பகீர்..!

    தென்னிந்திய மக்கள்

    தென்னிந்திய மக்கள்

    காரணம், அடிப்படையிலேயே தென்னிந்திய மக்கள் அனைத்துவிதமான மெல்லிய உணர்வுகளுக்கும் கட்டுப்பட்டவர்கள்.. மென்மையானவர்கள்.. கருணையையும், அன்பையையும் ஒருசேர குழைத்து தன்னகத்தே வைத்து கொண்டவர்கள்.. அந்த உணர்வுகளினாலேயே இயல்பிலேயே வளர்க்கப்படுபவர்களும்கூட.. அதனால்தான், எந்த சினிமா பாட்டு என்றாலும், ஏதாவது ஒரு தாக்கத்தை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்தி விடுகிறது..

    பாடலாசிரியர்கள்

    பாடலாசிரியர்கள்

    அன்று பட்டுக்கோட்டை கல்யாணம், பிறகு கண்ணதாசன், பிறகு வைரமுத்து, என ஒவ்வொரு பாடல்களுக்கான காலகட்டங்கள் மாறினாலும், அதன் ரசனைகள் மாறுபட்டாலும், பாட்டுக்களின் மகத்துவங்கள் என்னவோ இன்றுவரை குறைந்துபோகாமல் அப்படியே இருக்கிறது.. அப்படி ஒரு பாட்டுதான் சமீபத்தில் வெளியான ஊ சொல்றியா மாமா என்ற தெலுங்கு பாடல்..

    ஆண்ட்ரியா

    ஆண்ட்ரியா

    புஷ்பா திரைப்படத்தில் ஆண்ட்ரியா குரலில் நடிகை சமந்தாவின் நடனத்தில் வெளியான இந்த பாட்டு, யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்த மாதமே கடந்துவிட்டது.. இந்த படத்தில் முதல்முறையாக ஒரு ஐட்டம் பாடலுக்கு சமந்தா டான்ஸ் ஆடியதுமே, அதற்கான எதிர்பார்ப்புகள் எகிறிவிட்டன.. பெரிய அளவில் இந்த பாடல் ஹிட் ஆனது... எந்த அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றதோ அதே அளவு இந்த பாடல் சர்ச்சையிலும் சிக்கியது என்று வேறு விஷயம்..

    வீடியோ

    வீடியோ

    இப்போது ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதில், வயதான ஒரு பாட்டி ஐசியூவில் அட்மிட் ஆகி உள்ளார்.. மூக்கில் டியூப் மூலம் செயற்கை சுவாசம் தரப்படுகிறது.. கையில் குளுக்கோஸ் ஏறி கொண்டிருக்கிறது.. ஊசிகளை செலுத்தியதன் அடையாளமாக நிறைய பிளாஸ்திரிகள் பாட்டியின் கைககளில் ஒட்டப்பட்டுள்ளன.. ஒரு கையில் மட்டும் லேசான அசைவு காணப்படுகிறது.

    தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    பாட்டிக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருப்பதையே இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஊ சொல்றியா மாமா என்று பாட்டி பாடுகிறார்.. கண்ணை மூடிக்கொண்டு, அவர் பாட்டுக்கு பாட ஆரம்பிக்கிறார்.. பாட்டி எதற்காக இந்த பாட்டை பாடினார்? ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும்போது ஏன் இதை பாடினார்? குறிப்பாக இந்த பாட்டு எப்படி பாட்டிக்கு தெரிந்திருக்கும்? அதிலும் இத்தனை வரிகளை இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் ஞாபகம் வைத்து கொண்டு பாடுகிறாரே? என்ன காரணமாக இருக்கும் என்றெல்லாம் உறுதியாக தெரியவில்லை.

    எனர்ஜி

    எனர்ஜி

    ஆனால், இந்த பாடலை பாடுவதன் மூலம் பாட்டிக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கலாம் என்று தெரிகிறது.. தன்னை தேற்றிக்காள்ள, தன்னை பலப்படுத்தி கொள்ள, தனக்கு ஒன்றுமே ஆகாது, எல்லாம் சரியாகிவிடும் என்ற பாட்டியின் நினைப்பு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.. சினிமா பாடல்களின் தாக்கம் மனித உணர்வுகளில் கலந்தே பயணப்படுகிறது என்றாலும், பாட்டியின் கனமான அடர்த்தியின் நம்பிக்கைக்கு ஒரு ராயல் சல்யூட்!

    English summary
    An Old woman in the ICU ward sings the song Oo solriya mama, and wins hearts online
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X