இனி தான் ஆட்டமே இருக்கு.. ராக்கெட்டில் ஏற போகுது தங்கம் விலை.. ஆஹா ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை மாறி மாறி அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. இதனால். வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை என்ன ஆகப் போகிறது என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

தங்கம் விலை கடந்த வாரம் கணிசமாக அதிகரித்தது. அதிகபட்சமாகக் கடந்த ஆக.21ம் தேதி 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை ரூ.6710 வரை சென்றது. அதன் பிறகு இரண்டு நாட்களாகத் தங்கம் விலை குறைந்தது.

Anand Srinivasan gold personal finance

இப்போது கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,660க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே தங்கம் விலை எதற்காக இப்போது அதிகரிக்குமா குறையுமா.. இதற்கு என்ன காரணம் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்தியாவில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பாவில் இதன் விலை அதிகரித்தே வருகிறது. இப்போது அங்கு 2500 டாலராக இருக்கும் நிலையில், இதில் இருந்து 3000 டாலர் என்றால் 20% வரை அதிகரிக்கும் என்கிறார்கள்.

இதன் காரணமாகவே நான் இந்தியாவில் குறைந்தது 12-15% வரை அதிகரிக்கும் என்கிறது. அதை விட கூடுதலாக அதிகரிக்கவே செய்யும். மறுபுறம் இந்தியாவின் ரூபாய் மதிப்பும் வேகமாகச் சரிந்து வருகிறது. மற்ற ஆசிய நாடுகளின் கரன்சி உடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு தான் மோசமாக இருக்கிறது. நமது நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்காமல் இருப்பதே அதற்குக் காரணம்" என்றார்.

இந்திய ரூபாய்: இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்தாலும் தங்கம் விலை அதிகரிக்கும். அதாவது சர்வதேச வர்த்தகம் எப்போதும் டாலரில் தான் நடக்கும். எனவே, டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறையும் போது, நாம் அதே பொருளை அதிக விலை கொடுத்து வாங்குவது போல அமையும். இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால் அதுவும் நமது நாட்டில் தங்கம் விலை அதிகரிக்கக் காரணமாக இருக்கும்.

சர்வதேச சந்தை: அதே மற்றொரு வீடியோவில் அவர், "கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை மேற்குலக நாடுகளில் தங்கத்தை யாருமே வாங்கவில்லை. சொல்லப்போனால் மக்கள் தங்கத்தில் இருந்து பணத்தை வெளியே எடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தங்கத்தை வாங்கிக் கொண்டு இருந்தார்கள். மேலும், ரஷ்யா, சீனா மற்றும் துருக்கி நாட்டு மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கின. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் விற்பனை குறைந்துவிட்டது. ஆனால், மேற்குல நாடுகளில் தங்கத்தின் விற்பனை அதிகரித்துவிட்டது. மேலே சொன்ன நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். இந்தியா மற்றும் சீனாவில் விற்பனை கொஞ்சம் குறைந்துவிட்டது. எனவே, இப்போது தங்கம் விலை அதிகரிக்க மேற்குலக நாடுகளே காரணமாகும்.

சீனா: அதேநேரம் சீனாவில் விரைவில் நிலைமை மாறும். அங்கே ரியல் எஸ்டேட் மார்கெட் கவிழ்ந்துவிட்டது. வங்கிகளிலும் போதிய வட்டி கிடைப்பதில்லை. எனவே, மக்கள் மீண்டும் தங்கம் பக்கம் வருவார்கள்" என்றார். சர்வதேச அளவில் தேவை அதிகரிப்பதும் தங்கம் விலை அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடுகிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+