Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆங்கிலம் பேச வெட்கப்படனுமா? அமித்ஷா கண்ணுல பயம்! சீனா, ஜப்பானை பாருங்க! அட்டாக் மோடில் அன்பில் மகேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் முன்னேற்றத்திற்கு அதிகாரம் அளிப்பதாலேயே ஆங்கிலத்தை அமித்ஷா எதிர்க்கிறார் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அஷிதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய 'Main Boond Swayam, Khud Sagar Hoon' என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் காலம் வரும். அதுபோல ஒரு இந்திய சமூகம் உருவாவது வெகு தொலைவில் இல்லை. உறுதியுடன் இருப்பவர்களால் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்றார்.

Anbil Mahesh Amit Shah English

மேலும்," இந்திய நாட்டின் மொழிகள் தான் நமது கலாச்சாரத்தின் ஆபரணங்கள். நம்முடைய மொழிகள் இல்லாமல் நாம் முழுமையான இந்தியன் ஆக முடியாது. நம் நாட்டை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நமது கலாச்சாரம், நமது வரலாறு, நமது மதங்கள் பற்றி அறிந்து கொள்ள அந்நிய மொழி போதுமானதாக இருக்காது. முழுமையான இந்தியாவை பற்றி அரைவேகாடான அந்நிய மொழிகள் உதவாது. இந்த போராட்டம் மிகவும் கடினமானது. அதில் இந்திய சமூகம் வெற்றி பெறும் என நம்புகிறேன்" எனக் கூறியிருந்தார்.

அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஏழைகள், தலித்துகளுக்கு ஆங்கிலம் அதிகாரம் அளிப்பதால் அந்த மொழியை எதிர்ப்பதாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," ஆங்கிலம் இனி ஒரு காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல.. அது முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி. சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஆங்கிலத்தை காலனியத்துவ மொழியாக பார்க்கவில்லை. மாறாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்க ஆங்கிலம் கற்பிக்கின்றனர். வலுவான தேசியப் பெருமையைக் கொண்ட சீனா கூட, வளர்ச்சிக்கு ஆங்கிலத்தை அவசியமானதாகக் கருதுகிறது.

ஆனால் இந்தியாவில், அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆங்கிலத்தை மேல் வர்க்கத்துரியதாக சித்தரிக்க விரும்புகிறார்கள். ஆங்கிலம் நமது கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அவர்கள் எதிர்க்கவில்லை. மாறாக ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதால் எதிர்க்கிறார்கள்.. ஒரு காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததைப் போலவே, இப்போது அவர்கள் ஆங்கிலத்தை மக்களுக்கு எட்டாமல் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

இது மொழி பற்றியது அல்ல - இது கட்டுப்பாட்டைப் பற்றியது. திமுகவை பொறுத்தவரை தமிழ் மொழி என்பது நமது அடையாளம், ஆங்கிலம் வேலைவாய்ப்புகளுக்கான மொழியாக நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மொழிகளும் கற்றுத் தரப்படுகிறது. ஏனென்றால் மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது, ஒரு ஏணியாக இருக்க வேண்டும். அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல - அது சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+