Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினம் தினம் துயரம்.. தமிழ் மீனவர்களை வதைக்கும் இலங்கை கடற்படை! 6 பேரை விடுவிக்கக்கோரும் அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை உடனடியாக மீட்க நடவடிக்கை வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க விசைப்படகுகளில் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் 6 பேர் கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து இருக்கிறது. அவர்கள் கடலுக்குள் செல்ல பயன்படுத்திய 2 மீன் பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

Anbumani insisted to rescue 6 Rameswaram fishermen arrested by the Sri Lankan Navy

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட செய்தி அவர்களின் உறவினர்களுக்கும் மற்ற மீனவர்களுக்கும் பரவியது. தகவல் அறிந்த உறவினர்கள் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளையும் சிங்களப் படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 3 நிகழ்வுகளில் 40 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Anbumani insisted to rescue 6 Rameswaram fishermen arrested by the Sri Lankan Navy

இந்திய அரசின் வலியுறுத்தலை ஏற்று அவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்கான ஆணை கூட இன்னும் பிறப்பிக்கப்படாத நிலையில் அடுத்தக்கட்டமாக மேலும் 6 மீனவர்களை இலங்கைப் படைகள் கைது செய்துள்ளன. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் நிகழ்வாகி விட்டன.

இலங்கைப் படையினரின் தொடர் அத்துமீறல்கள் காரணமாக தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+