சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் மிக அதிகம்.. கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்கனும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் கொரோனா சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும், இது தவறானது என கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், கொரோனா பரிசோதனை கட்டணத்தை 500 ரூபாய குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5 மாதத்தில் அசுர வளர்ச்சி! சர்ரென உயர்ந்த அகிலேஷ் கிராப்.. யோகிக்கு சிக்கல் -ஏபிபி சி வோட்டர் சர்வே 5 மாதத்தில் அசுர வளர்ச்சி! சர்ரென உயர்ந்த அகிலேஷ் கிராப்.. யோகிக்கு சிக்கல் -ஏபிபி சி வோட்டர் சர்வே

ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா சோதனைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பது இதற்கு தடையாக உள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தான் பரிசோதனை கட்டணம் அதிகம் என கூறியுள்ளார்.

 தமிழகத்தில் அதிகம்

தமிழகத்தில் அதிகம்

இந்தியாவில் நமது அண்டை மாநிலங்களாக கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கு ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை ரூ.500க்கு செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு நிறுவனங்களில் கொரோனா சோதனைக்கு ரூ.350 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகக்குறைவாக ஆந்திராவில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் ரூ.475 ஆக உள்ளது. ஆனால், மருத்துவக் கட்டமைப்பில் முன்னேறிய தமிழகத்தில் மட்டும் கொரோனா சோதனை கட்டணம் மிக அதிகமாகவுள்ளது என கூறியுள்ளார்.

கொரோனா பரிசோதனை கட்டணம்

கொரோனா பரிசோதனை கட்டணம்

மேலும் தமிழ்நாட்டில் அரசு முகாம்கள் மூலம் கொரோனா சோதனை இலவசமாக செய்யப்படுகிறது. அரசு ஆய்வகங்களில் தனிப்பட்ட முறையில் சோதனை செய்து கொள்பவர்களுக்கு ரூ.550 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் ஆய்வகங்களில் இது 900 ஆக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் கொரோனா சோதனைக் கட்டணம் ரூ.600 ஆக உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் கொரோனா சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவறு என தனது அறிக்கையின் அன்புமணி கூறியுள்ளார்.

மிக அதிக கட்டணம்

மிக அதிக கட்டணம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆய்வுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.3,000 ஆகவும், வீடுகளுக்கு வந்து சளி மாதிரி எடுத்துச் செல்ல ரூ.500 கூடுதல் கட்டணம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா சோதனைக் கட்டணம் படிப்படியாக குறைக்கப்பட்டு, கடந்த 6 மாதங்களாகவே ரூ.500 தான் மற்ற மாநிலங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் கடந்த மே மாதம் முதல் இதே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. அதன்பின் மற்ற மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த போதிலும் தமிழகம் குறைக்கவில்லை எனவும் அன்புமணி கூறியுள்ளார்.

அரசுக்கு கோரிக்கை

அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாட்டில் தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு இல்லாமல் சோதனைகளை அதிகரிக்க முடியாது. தமிழகத்தில் இன்றைய நிலையில் மொத்தம் 321 கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் 69 மட்டுமே அரசு ஆய்வகங்கள். மீதமுள்ள 252 ஆய்வகங்கள் தனியாருக்கு சொந்தமானவை. அவற்றில் கட்டணம் குறைக்கப்பட்டால் மக்கள் தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனைகளை செய்து கொள்வார்கள். தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன், தனியார் ஆய்வகங்களின் கொரோனா ஆய்வுக் கட்டணத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.500 ஆக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Tamil Nadu is the only state in India to charge more for corona testing. Anbumani Ramadoss has said that this is wrong and has demanded the government to reduce the corona test fee by Rs 500.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X