மாற்றுத்திறனாளிகளுக்கான அரசுப் பணி.. அநீதி இழைக்கும் திமுக அரசு.. கொந்தளிக்கும் அன்புமணி
சென்னை: அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ஆள்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தாமல் சமூக அநீதி இழைப்பதா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களில் தகுதியான மாற்றுத் திறனாளிகளை அமர்த்த சிறப்பு ஆள் தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்று வரை அத்தகைய சிறப்பு ஆள்தேர்வு நடத்தப்படவில்லை.

சட்டப் பேரவையிலும், சட்டப் பேரவைக்கு வெளியிலும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவிட்டு, அவற்றை செயல்படுத்த எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் 2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை மூன்றிலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தி கடந்த 2017-ஆம் ஆண்டு மே 30-ஆம் நாள் அரசாணை வெளியிடப்பட்டது.
அதே நாளில் அந்த அரசாணைக்கு வரவேற்பு தெரிவித்த நான், ''தமிழக அரசுத் துறைகளில் குறைந்த எண்ணிக்கையிலான பணிகளே மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை மறுஆய்வு செய்து கூடுதல் பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் இல்லாததால் காலியாக வைக்கப்பட்டுள்ள பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்'' என்று வலியுறுத்தியிருந்தேன்.
இந்தக் கோரிக்கையை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அடுத்த ஓராண்டிற்குள் சிறப்பு ஆள்தேர்வின் மூலம் அவை நிரப்பப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் 27.04.2023-ஆம் நாள் அரசாணை வெளியிடப்பட்டது மட்டுமின்றி, அரசுத்துறைகளில் இரு ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு விதிகளைத் தளர்த்தி முன்னுரிமை அடிப்படையில் நிலையான பணி வழங்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், அரசாணை வெளியிடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பும், அரசாணையும் கோப்புகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணி வழங்க எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. தமிழக அரசு நினைத்தால் மிக எளிதாக சிறப்பு ஆள்தேர்வுகளை நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைகளை வழங்கியிருக்கலாம்.
ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாங்குவதில் திராவிட மாடல் அரசு எந்த அக்கறையையும் காட்டவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டதன் நோக்கமும், இந்த இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதன் நோக்கமும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்பது தான்.
ஆனால், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக வானத்தையே வில்லாக வளைத்து விட்டதைப் போன்று பெருமை பேசிக் கொள்ளும் திராவிட மாடல் அரசு, அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான அடிப்படைக் கடமையைக் கூட செய்யத் தவறியதிலிருந்தே அதன் இரட்டைவேடத்தை அறிந்து கொள்ள முடியும்.
பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் நாள் நாளை மறுநாள் கொண்டாப்படும் நிலையில், அதை தமிழக அரசின் சாதனை என்று வீண் பெருமை பேசுவதற்கான வாய்ப்பாக நினைத்து வீணடிக்காமல், மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு ஆள்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நடப்பு நிதியாண்டின் முடிவுக்குள் அனைத்துப் பின்னடைவுப் பணியிடங்களையும் நிரப்பி மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications