பல்லாயிரம் ஆண்டுகால தமிழ்நாடு- சீனா உறவு... கொட்டிக் கிடக்கும் சான்றுகள் இங்கே!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
2000 வருட பந்தம்.. தமிழர் பெருமை.. சீன அதிபர் வருகைக்கு மகாபலிபுரத்தை தேர்வு செய்தது ஏன்?
சென்னை: சீனா அதிபர் ஜின்பிங்கின் தமிழ்நாடு வருகை பெரும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவு சிந்துசமவெளி காலத்தில் இருந்தே இருக்கிறது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
சங்க காலம் தொடங்கி இன்று வரை நீடிக்கும் சீனாவுடனான உறவுக்கான சான்றுகள்:
"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துண்ர்வும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு"

- இது சங்க இலக்கியமான பட்டினப்பாலை பாடல் (185-193). இதில் குணகடல் துகிரும் என்பது சீனா பட்டை குறிக்கிறது என்பது ஆய்வாளர்கள் கருத்து.
- சீனாவின் பட்டுதான் காஞ்சிபுரத்தில் அறிமுகமானது. அந்த அறிமுகத்தால்தான் பன்னெடுங்காலமாக பட்டு உலகில் பட்டொளி வீசிப் பறக்கிறது காஞ்சிபுரம்.
- சீனாவின் வரலாற்றை விவரிக்கும் சியன் ஹன்சுவில் இடம்பெற்றிருக்கும் ஹீவாங்க என்பது காஞ்சிபுரம் நகரத்தைதான் குறிக்கும் என்கிற கருத்தும் உண்டு.
- காஞ்சிபுரத்து போதி தருமர்தான் சீனாவில் பெளத்த மதத்தையும் பல்வேறு கலைகளையும் நிறுவியவர்.
- சீனா பயணி யுவான்சுவாங் கிபி 7-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்தார்.
- பல்லவ, சோழ மன்னர்கள் சீனாவுடன் வணிக தொடர்பு வைத்திருந்ததற்கான சான்றாக ஏராளமான சீனா காசுகளை தொல்லியல்துறையின் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டெடுத்துள்ளனர்.

- இன்று சீனா அதிபர் ஜின்பிங் 200 பேர் கொண்ட குழுவுடன் இந்தியாவுக்கு வருகை தருகிறார். சோழர்கள் காலத்திலும் இந்தியாவில் இருந்து தூதுக்கள், வர்த்தக குழுக்கள் பெரும் எண்ணிக்கையில் சீனா சென்றிருக்கிறது.
- நாகப்படினத்தில் சீனபகோடா என அழைக்கப்பட்ட இடமானது சீனா துறவிகளுக்காக 2-வது நரசிம்ம வர்மன் காலத்தில் கட்டப்பட்ட பவுத்த விகாரை.
- கிபி 13-ம் நூற்றாண்டு பயணி மார்க்கோபோலா சீனாவில் இருந்து இலங்கை மூலமாக தமிழ்நாட்டின் பெரியபட்டிணம் துறைமுகம் வந்தடைந்தார்.
- தரங்கம்பாடி பகுதியில் கிபி 17-ம் நூற்றாண்டு சீனா மன்னர்களின் காசுகள் கிடைத்திருக்கின்றன.
- நாடு விடுதலை அடைந்த பின்னர் சீனா பிரதமர் சூ என்லாய் தமிழ்நாடு வருகை தந்திருந்தார். அப்போது சென்னை ஐசிஎப், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இப்படி பழம்பெரும் காலம் முதல் இன்று வரை இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உறவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
More From
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications