அன்றே கணித்த சூர்யா.. இஸ்ரோவின் ஆதித்யா எல்1 சூரிய ஆய்வு பத்தியுமா? இந்த பாடல் வரிகளை கவனிச்சீங்களா
சென்னை: சூரிய ஆராய்ச்சிக்காக இஸ்ரோ ஆதித்யா எல்1 திட்டத்தை செயல்படுத்த இருக்கும் நிலையில், இதையும் அன்றே கணித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. எப்படி தெரியுமா?
சந்திரயான் 3 இன் வெற்றியை தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சலாக இன்று 11.50 மணியளவில் ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டு உள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தை PSLV C57 ராக்கெட் விண்ணில் சுமந்து செல்கிறது. இதனை ஏவுவதற்கான கவுன்டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது .

இந்த விண்கலம் 100 முதல் 120 நாட்கள் பயணித்து பூமிக்கும் சூரியனுக்கு இடையே சமமான ஈர்ப்பு விசையை கொண்டு உள்ள எல்1 என்ற புள்ளியை அடைய உள்ளது. அந்த புள்ளியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தவுடன் சூரிய புயல் குறித்தும், அதன் கொரோனா, பிளாஸ்மா பற்றியும், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் முதல் சூரிய ஆய்வு விண்கலம் இதுவாகும். கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழ்நாட்டை சேர்ந்த
இஸ்ரோ விஞ்ஞானி நிகர் சாஜிதலைமையிலான குழு சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை வடிவமைத்தது. இதன் சோதனைகளை வெற்றிகரமாக முடித்த நிலையில் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏவப்பட உள்ளது.
பூமியில் இருந்து 1.5 மில்லினர் கிலோ மீட்டர் தொலைவு வரை பயணித்து சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த ஆதித்யா எல் 1 விண்கலம், அதன் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது. உலகையே திரும்பி பார்க்க வைத்து உள்ள இந்த திட்டத்தையும் நடிகர் சூர்யா அன்றே கணித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகனும்.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை சரோஜா தேவி, நயன்தாரா, நடிகர் வடிவேலு நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆதவன். உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக சினிமாவில் தோன்றிய படம் இது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருப்பார்.
ஆதவன் என்றாலே சூரியன் என்று அர்த்தம். பெயரின் அடிப்படையிலேயே ஆதித்யா எல் 1 திட்டத்துக்கும் இப்படத்துக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்ட நிலையில், அதில் வரும் பாடல் ஒன்றின் வரிகள் ஆதித்யா எல் 1 திட்டத்தை நினைவுபடுத்துகின்றன. மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய "டமக்கு டமக்கு டம் டம்மா" என்ற பாடலின் வரிகள்தான் அவை.
"எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும்
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
வானம் மேலே ஏ பூமி கிழே
வாசனை நாட்கள் நடுவிலே
ஏ தோளின் மேலே ஏ பாரம்மில்லே
துணிந்தவன் நடப்பான் கடலிலே"
என்ற வரிகள் பூமிக்கும் சூரியனுக்கு நடுவில் ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலத்தை நினைவுபடுத்துகின்றன.
அதேபோல், "ஆனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்"
என்று சூரியனை தன்னை எடுத்துக்கொள் என நம்மை நெருங்கி வருவதாக அர்த்தம் தருவதாக நா.முத்துக்குமார் குறிப்பிட்டு இருப்பது ஆதித்யா எல் 1 திட்டத்துக்கு அப்படியே பொருந்திப்போகிறது. இதேபோல்தான் 7 ஆம் அறிவு படத்தில் சீனாவிலிருந்து வைரஸ் பரப்பப்படுவதாக வரும் கதையை கொரோனாவுடன் பொருத்திப் பார்த்தார்கள்.
அதேபோல், காப்பான் படத்தில் காட்டப்பட்ட வெட்டுக்கிளிகள் பிரச்சனை நிஜத்தில் வடமாநிலங்களில் நடந்தன. அதேபோல் சிங்கம் 2 படத்தில் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனாக வரும் ஆப்பிரிக்க நடிகர் நிஜத்திலும் போதை மருந்து கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். இதுபோன்ற பல சம்பவங்களை குறிப்பிட்டு அன்றே கணித்தார் சூர்யா என்பது சமூக வலைதளங்களில் டிரெண்டானது. இப்போது புதிய டிரெண்ட் சூர்யா ரசிகர்களுக்கு கிடைத்து உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications