"எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை விட சின்ன பையனை போய்.."... கதறி அழுத அனிதா!
பிக்பாஸ் வீட்டில் கதறி வெடித்து அழுத அனிதா சம்பத்
சென்னை: "எனக்கு கல்யாணமாயிடுச்சு.. நான் குழந்தை இல்லை.. பேச வாய்ப்பு தந்தால்தானே நான் சொல்றது புரியும்" என்று அனிதா சம்பத் கண்ணீர்விட்டு கூறியது கடுப்பைதான் ஏற்றியது.
பிக்பாஸ் ஆரம்பித்தது முதல் விறுவிறுப்பு தொற்றி கொண்டுள்ளது.. இதில் முதல் வாரம் அனிதாவும், சுரேஷூம் பரபரப்பாக பேசப்பட்டார்கள்.
அதற்கு அடுத்த வாரம், அதாவது கடந்த வாரங்களில் சுரேஷ் குட் புக்கில் ஓரளவு இடம்பிடிக்க நேர்ந்த அதே நேரம், அனிதாவை அமைதியாகவும், அழுதுவடியும் முகமாகவும் மட்டுமே பார்க்க நேர்ந்தது.

பிக்பாஸ்
இப்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. நேற்றைய எபிசோடில் இருந்து அழுகையை கூட்டி உள்ளார்.. நாமினேஷனுக்கு அவர் பெயர் வந்துவிடவும், அவரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை.. அதனால், எதைஎதையோ புலம்பி கொண்டும், வம்பிழுத்து கொண்டும் இருப்பது போல தெரிகிறது.. ஒருகட்டத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத அனிதாவை பார்த்து யாருக்கும் பச்சாதாபம் வரவில்லை.. மாறாக எரிச்சல்தான் வந்தது.

சின்ன பையன்
ஒரு இடத்தில், அனிதாவை பேச விடாமல் தடுத்ததாக கூறி, "என்னை ஏன் பேசவே விட மாட்டேங்கறீங்க. என்னை விட சின்ன பையன் பாலா பேசுறது எல்லாம் சரியாக இருக்கும்ன்னு சொல்றீங்க? என்னை விட பெரியவங்களுக்கும் பேசறதுக்கு சான்ஸ் தர்றீங்க, ஆனா எனக்கு வாய்ப்பு இல்லை.. நான் ஒன்னும் குழந்தையல்ல. எனக்கு கல்யாணமாயிடுச்சு.

முடிவுகள்
நான் சொல்லும் பாயிண்ட் நல்ல பாயிண்ட்டாகதான் இருக்கும்.. என் வீட்டில் நானும் ஹஸ்பண்டும்தான் இருக்கோம்.. நான்தான் முடிவு எடுக்கிறேன்... இங்கு எடுக்க முடியாதா? நான் மீடியாவில் இருக்கேன்.. என்னை பேசவிடாமல் டம்மியாக்கறீங்க..." என்று பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்து தன் வீட்டு விவகாரம் வரை இழுத்து கொண்டு வந்து பேசினார்.

புலம்புவது சரியா?
அனிதா எவ்வளவுதான் மூச்சை பிடித்து கொண்டு பேசினாலும், ரசிகர்களுக்கு சலிப்பையும், வெறுப்பையும்தான் தந்துவிட்டது.. என்ன செய்து டிஆர்பி ரேட் ஏற்றுவது என தெரியாமல், எதை எதையோ செய்து கொண்டு இருப்பது போல தெரிகிறது... சாமர்த்தியமாகவும், புத்திசாலித்தனமாகவும், விளையாடியவர்களே இ துவரை வெற்றி பெற்றுள்ளனரே தவிர, அழுது புலம்புபவர்கள் கிடையாது என்பதை அனிதாவுக்கு சொல்லி புரிய வைப்பது யாரோ?!
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications