அண்ணா பல்கலைக்கழக முறைகேடு விவகாரம்.. பதிவாளர் உட்பட பல அதிகாரிகள் நீக்கம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக முறைகேடு குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு, அண்ணா பல்கலை. பதிவாளர் ஜெ. பிரகாஷ் உள்ளிட்ட பல அதிகாரிகளைப் பணியிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தார் வேல்ராஜ். இவர் 3 ஆண்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தாராக பதவி வகித்த நிலையில், கடந்த 2024இல் அவருடைய துணைவேந்தர் பதவி முடிவடைந்தது. இருப்பினும் அவருக்கு ஓய்வுபெறும் வயது இல்லாததால் தொடர்ந்து அங்கு பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

வேல்ராஜ் துணைவேந்தராக பதவி வகித்த காலத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் ஜூலை 31 அன்று பணி ஓய்வு பெற இருந்தார்.
இந்நிலையில் முறைகேடு விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர் ஓய்வுபெறும் நாளில் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, வேல்ராஜ் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மேல்முறையீடு செய்தார். அதில் வேல்ராஜ் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தும், அவருக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வேல்ராஜை சஸ்பெண்ட் செய்த அரசு உத்தரவுக்கு எதிரான ஆளுநரின் முடிவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வேல்ராஜுடன் பதிவாளர் பிரகாஷ் மற்றும் 12 அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தும் முறைகேடு புகாரில் சம்பந்தப்பட்ட ஒருவர் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடாது என்றும் சிண்டிகேட் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆட்சேபணை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பதிவாளர் பதவியில் இருந்து பிரகாஷ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications