மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பு கட்டாயம் இதை கவனிங்க. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொறியியல் படிக்க கல்லூரியில் சேர உள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் 94.56% பேர் அதாவது, 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

Anna University Vice-Chancellor s advice to students who are willing to join engineering

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மே 6ஆம் தேதி அன்றே பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கிவிட்டன. அன்றைய தினமே மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக வழங்கப்பட்டன.

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 6ஆம் தேதி தொடங்கியது. ஜூன் 12ஆம் தேதி வரை சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஜூன் 12ஆம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய 5 நாட்களில் விண்ணப்பித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை 84 ஆயிரத்தை தாண்டியது. நேற்று வரை 84,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். வரும் நாட்களில் விண்ணப்ப பதிவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களின் செமஸ்டர் தேர்வுகளின் இறுதியில், தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதத்தை, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்ளது. அதன்படி, 2 கல்லூரிகளில், 90 சதவீதத்துக்கும் மேலான மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

24 கல்லூரிகளில், 1 முதல் 10 சதவீதம் வரையில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரு கல்லூரிகளில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ள நிலையில், கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் வேல்ராஜ், "பொறியியல் படிப்புகளுக்கு தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதேசமயம் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை படிப்பதில் தான் அதிகமான மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எல்லா பிரிவுகளாலும் பயன்படுத்த முடியும். எனவே நாம் படிக்கும் எந்த பிரிவானாலும் அதில் தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 56 பொறியியல் கல்லூரிகள் 20 சதவீதற்கும் குறைவாக தேர்ச்சி விகிதமே அடைந்திருக்கிறது. இதுபோன்ற கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பே கல்லூரியின் தரத்தை அறிந்து செல்ல வேண்டும். மேலும் குறைந்த தேர்ச்சி அடைந்த 11 கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகமும் குறைந்த தேர்ச்சி விகிதமுள்ள கல்லூரிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+