பாஜகவில் ‘போலி’ அமைப்பு.. சாட்டையை சுழற்றிய அண்ணாமலை! ‘அப்படி ஒன்னு இல்லவே இல்ல’ -3 தாமரைகள் நீக்கம்
சென்னை: தமிழ்நாடு பாஜகவில், பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்ற போலி அமைப்பை உருவாக்கியதாக 3 பேரை கட்சியிலிருந்து மாநில தலைவர் அண்ணாமலை நீக்கி இருக்கிறார்.
சேலத்தை சேர்ந்த கே.ராஜு. பாஜகவை சேர்ந்த இவர், தமிழ்நாடு பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்ற அமைப்பை உருவாக்கி தன்னை தலைவராக அறிவித்துக் கொண்டு ஆட்களை சேர்த்து இருக்கிறார்.
ஆனால், இந்த தொழிற்சங்க பேரவை தொடர்பாக எந்த அறிவிப்பையும் மாநில பாஜக தலைமை வெளியிடாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணாமலை விளக்கம்
இது தொடர்பாக நேற்று அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில், 'தமிழக பாரதிய ஜனதா கட்சியில் பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்ற அமைப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பிற்கு திரு.இராஜு என்பவர் மாநில தலைவர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

எச்சரிக்கை
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்கின்ற ஒரு அமைப்பு கிடையாது. கட்சியின் சின்னம், பாரத பிரதமரின் புகைப்படம் மற்றும் தேசிய தலைவர்களின் புகைப்படங்களை தவறுதலாக உபயோகப்படுத்தினால், உபயோகப்படுத்துபவர்கள். மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.' என்று குறிப்பிட்டிருந்தார்.

நடவடிக்கை
இந்த நிலையில் அவர் அடுத்து வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனுமதியும் ஒப்புதலும் இல்லாமல் கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்ற போலியான அமைப்பை உருவாக்கியும், கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியும், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் பொறுப்பாளர்கள் ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்கள்.' என்று குறிப்பிட்டு உள்ளார்.

3 பேர் யார்?
பாஜக உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் ஸ்டீல் அருள், சேலத்தை சேர்ந்த கே.இராஜு, சேலத்தை சேர்ந்த என்.பி. கருணாகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்த அண்ணாமலை, 'கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது.' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்










Click it and Unblock the Notifications