திருமணத்திற்கு போகணும்.. அமித் ஷா ஆலோசனையில் பங்கேற்க டெல்லி செல்லாதது ஏன்? அண்ணாமலை விளக்கம்!
சென்னை: அதிக திருமண நிகழ்வுகள் மற்றும் வேலைகள் இருப்பதால், டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடக்கும் பாஜக உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செய்ய இயலவில்லை என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வந்ததாக கூறிய அண்ணாமலை, சொந்த பணிகள் காரணமாக பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி ஏப்ரல் மாதம் அமைந்தது. அதன்பின் அதிமுக - பாஜக இணைந்து ஒரு போராட்டத்தைக் கூட நடத்தாத நிலையில், தொண்டர்கள் மத்தியில் கூட்டணி இணைப்பு ஏற்படவில்லை. இதனால் இரு கட்சிகளின் தலைவர்களும் அடுத்தக் கட்டத்தை திட்டங்களை மேற்கொள்ள ஆயத்தமாகினர்.

பாஜக தரப்பில் பூத் கமிட்டி வலிமையாக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பாஜக தொண்டர்கள் பங்கேற்க தொடங்கினர். அதேபோல் மத்திய அமைச்சர் அமித்ஷா நேரடியாக தமிழக பாஜகவை வழிநடத்தி வருகிறார். ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய பணிகளை கூறுவதோடு, அதனை ஆய்வும் செய்து வருகிறார்.
இதன் மூலமாக மோடி - அமித்ஷா கூட்டணி தமிழக அரசியலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர்களை டெல்லி மேலிடம் அவசரமாக அழைத்தது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க எல்.முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோரும் டெல்லிக்கு சென்றனர். டெல்லியில் பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் நடந்து வரும் நிலையில், அண்ணாமலை இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அண்ணாமலை தரப்பில், அதிக திருமண நிகழ்வுகள் மற்றும் சொந்த வேலைகள் இருப்பதால் டெல்லிக்கு செல்ல இயலவில்லை.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணி விவகாரம், தமிழக பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதேபோல் முதற்கட்ட தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச உள்ளதாக கூறப்பட்டது.
கடந்த முறை பிஎல் சந்தோஷ் தமிழ்நாடு வந்தபோதே, அண்ணாமலை குறித்து நயினார் நாகேந்திரன் புகார் அளித்திருந்ததாக கூறப்பட்டது. அதேபோல் கடந்த சில மாதங்களாக அண்ணாமலை ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். இதனால் உட்கட்சி பூசல் விவகாரம் குறித்த ஆலோசிக்கும் கூட்டத்தை அண்ணாமலை வேண்டுமென்றே தவிர்த்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications