அரசு நல்ல பாடத்தை கற்று இருக்கும்.. மாரிதாஸ் மீதான வழக்கு ரத்துக்கு அண்ணாமலை வரவேற்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பா.ஜ.க. ஆதரவாளரும், யூடியூபருமான மாரிதாஸ் என்பவர் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தை வைத்து காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறி இருந்தார்.

இதனை தொடர்ந்து புகாரின் பேரில் சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸை போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் மூத்த பத்திரிகையாளர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போர்ஜரி செய்து மோசடியாக மெயில் ஒன்றை வெளியிட்ட புகாரிலும் மாரிதாஸை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.

 பொங்கியெழுந்த அண்ணாமலை

பொங்கியெழுந்த அண்ணாமலை

மாரிதாஸ் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறையை மிகக்கடுமையாக விமர்சித்தார். தமிழக போலீசார் தங்கள் விருப்பம்போல் செயல்படுகிறார்கள். அவர்கள் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கட்டுப்பாட்டில் இல்லை.எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்று அண்ணாமலை கடுமையாக பேசினார்.

ஹைகோர்ட்டில் மனுதாக்கல்

ஹைகோர்ட்டில் மனுதாக்கல்

இதேபோல் பாஜகவினர் சிலரும் மாரிதாஸ் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். காவல்துறையை அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கிடையே அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாரிதாஸ் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் கோரிக்கை விடுத்தார்.

யூடியூபர் மாரிதாஸ்

யூடியூபர் மாரிதாஸ்

இந்த நிலையியல் யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், 'சகோதரர் மாரிதாஸ் மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

Recommended Video

    மதுரை: மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
    தமிழ்நாடு பாஜக

    தமிழ்நாடு பாஜக

    தமிழ்நாடு பாஜக இந்த தீர்ப்பை வரவேற்பது மட்டுமில்லாமல், தேசியம் பேசக்கூடிய அனைத்து குரலுக்கும் உறுதுணையாக இருக்கும். அறிவாலய அரசு நல்ல பாடத்தை கற்று இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் நம்புகின்றேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+