ரபேல் வாட்ச்.. என் சொத்து விவரத்தை நான் வெளியிடுவேன்.. உங்களால முடியுமா? திமுகவிற்கு அண்ணாமலை சவால்
சென்னை: பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பி இருந்த நிலையில் இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணாமலை பதிலளித்திருக்கிறார். மட்டுமல்லாது திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் வெளியிடப்படுமா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்திருந்த அண்ணாமலை தான் கட்டியுள்ள வாட்ச் குறித்து விளக்கமளித்திருந்தார். இதனையடுத்து இந்த வாட்ச் வாங்கியதற்கான ஆதாரங்கள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பி இருந்தார்.
அதாவது, "பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, ரூ.5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்.

கேள்வி
அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?" என்று டிவிட்டரில் கேள்வியெழுப்பி இருந்தார்.

விமர்சனம்
இது பெரும் விவாதத்தை கிளப்பியது. உடனே பாஜக ஆதரவாளர்கள் பலர் திமுக தலைவர்களின் வருமான விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அதேபோல ஒவ்வொரு தலைவர்கள் பயன்படுத்தும் காரின் புகைப்படங்களை பகிர்ந்து அதன் விலையையும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் சட்டையையும், கடிகாரத்தையும் வைத்து திமுகவினர் அரசியல் செய்கின்றனர் என்று பாஜகவினர் விமர்சித்திருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி, "ராகுல்காந்தி போட்ட டிஷர்டையும், நடிகை போட்ட பிகினியையும் வைத்து அரசியல் செய்கிற கட்சி பிஜேபிதான்" என்று பதிலடி கொடுத்திருந்தார்.

ராஜீவ்காந்தி
மேலும், "அண்ணாமலை கட்டியுள்ள watch விலை ரூ.8,00,000 மேல். அதன் நிறுவனம் ஆடம்பர luxury watch செய்யும் bell and ross என்ற சுவிச்சர்லாந்த் நிறுவனம்! அண்ணாமலை இதில் தேசியவாதி என பெருமை கொள்ள எதுவும் இல்லை. அதன் விலையும் குறைவு இல்லை இதை இவருக்கு யார் பரிசாக கொடுத்தார் என்பது தான் கேள்வி?" எனவும் கேள்வியெழுப்பியிருந்தார். எனவே நேற்றிரவே அண்ணாமலை இதற்கு விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று காலை அவர் விளக்களித்துள்ளார். அதில், "ஊழல் விவகாரத்தில் திமுக என்னுடன் போராட விரும்பினால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

பதில்
கடந்த 2011ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரையில் நான் தாக்கல் செய்த வருமான வரி, ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியபோது நான் பெற்ற வருமானம், என ரூ.1 லட்சத்திற்கு மேல் என்னிடம் இருக்கும் அசையா சொத்துக்களின் விவரங்கள் வெளியிடப்படும். இந்த வாட்ச் நான் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் வாங்கியது. அதேபோல என்னிடம் இருக்கும் ஆடு-மாடுகள் என அசையும் சொத்துக்களின் விவரங்களை தமிழ்நாட்டு மக்களை சந்திக்க நான் நடைப்பயணம் மேற்கொள்ளும்போது வெளியிடுவேன்.

ஒரு பைசா
இப்படி நான் வெளியிடும் சொத்துக்களின் மதிப்பை விட ஒரு பைசா அதிகமாக எனக்கு சொத்து இருக்கிறது என யாரேனும் ஆதாரத்துடன் நிரூபித்தால் அன்று எனது மொத்த சொத்தையும் அரசுக்கு கொடுத்துவிடுகிறேன். இதேபோல திமுக தலைவர்களிடமிருந்தும் இது போன்று விவரங்களை பெற விரும்புகிறீர்களா என்பதை தமிழக மக்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்" என்று கூறியுள்ளார். இந்த விவாதங்கள் தமிழக அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்!












Click it and Unblock the Notifications