Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூப்பனார் கனவை நிறைவேற்றுவோம் என்ற அண்ணாமலை.. பாஜக ஆட்சியை கவிழ்க்க மூப்பனார் உதவிய கதை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூப்பனாரின் கனவுகளை நிறைவேற்ற பாலம் அமைத்துள்ளார் ஜி.கே.வாசன், 2024, 2026 தேர்தல்களில் மூப்பனாரின் கனவை நிறைவேற்றுவோம் என பேசியுள்ளார் அண்ணாமலை. மூப்பனார், பாஜக ஆட்சியை கவிழ்க்க வாக்களித்தவர், அது தெரியாமல் மூப்பனார் கனவை நிறைவேற்றுவோம் என அண்ணாமலை பேசுகிறாரே என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முறிந்த நிலையில் பாஜக தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைப்பது குறித்து குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும் தனியாக கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.

Annamalai saying that he will fulfil the dream of GK Moopanar, who voted to overthrow BJP government

பாஜக கூட்டணியில் தமாகா: இந்நிலையில், பாஜக மேலிய பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை நேற்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து, பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தமாகா தேர்தலைச் சந்திக்கும் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை தமாகா அலுவலகத்திற்கே நேரில் சென்று சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஜிகே வாசனை புகழ்ந்து பேசினார். தமாகா நமது கூட்டணியில் இணைந்துள்ளதன் மூலம் பெரிய மாற்றத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டு இருக்கிறது என்றார் அண்ணாமலை.

மூப்பனாரின் கனவை நனவாக்குவோம் என பேசிய அண்ணாமலை: மேலும் பேசிய அண்ணாமலை, ஜி.கே.மூப்பனாரின் கனவு தமிழக மண்ணிலே நடந்தே தீரும் என்று நான் உறுதியாக கூறுகிறேன். ஐயா மூப்பனார் கனவை 2024 மற்றும் 2026 தேர்தலில் நிறைவேற்றுவதற்கான பாலமாக இந்த கூட்டணி உள்ளது எனத் தெரிவித்தார் அண்ணாமலை.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டுள்ளது. பாஜக அதிமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார் ஜிகே வாசன். எனவே, தமிழ் மாநில காங்கிரஸ் பாஜக கூட்டணியில் இணைவது புதிய விஷயம் இல்லை. எனினும், மூப்பனாரின் கனவை நிறைவேற்றுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி இருப்பது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

அன்றைய தமாகா: ஜி.கே. மூப்பனார், காங்கிரஸ் கட்சி, 1996ல் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை விரும்பாமல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி முதல் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 20 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் தமாகா சார்பில் வெற்றி பெற்ற 20 மக்களவை உறுப்பினர்களை தம்முடன் அழைத்துச் சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துப் பெற்றார்.

பின்னர்,1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது ஜிகே மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. அப்போது 3 இடங்களில் மட்டுமே வென்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேர் மக்களவை உறுப்பினர்களாக இருந்தனர்.

வாஜ்பாய் அரசை கவிழ்க்க உதவி: 1999ஆம் ஆண்டு ஏப்ரலில் பாஜக பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரை அழைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சோனியா காந்தியின் கோரிக்கையை ஏற்ற ஜிகே மூப்பனார், அதன்படியே, தமது கட்சி எம்.பிக்களை வாஜ்பாய் அரசுக்கு எதிராக வாக்களிக்கச் செய்தார். தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த மூன்று எம்.பிக்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தது. அவ்வாறாக, வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் மூப்பனார்.

இந்நிலையில் தான், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், மூப்பனாரின் கனவை நிறைவேற்ற பாலம் அமைத்துள்ளார் வாசன், மூப்பனாரின் நனவாக்குவோம் என சூளுரைத்துள்ளார் அண்ணாமலை. மூப்பனாரின் கனவே பாஜக ஆட்சியை கவிழ்ப்பதுதான் என நெட்டிசன்கள், அண்ணாமலை பேச்சுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+