கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பு! தமிழக அரசு தூக்கத்தை கலைக்க வேண்டும்! -அண்ணாமலை
சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையையே இந்த நிகழ்வு காட்டுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
உடனடியாக தமிழக அரசு தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும், கவலைக்கிடமான நிலையில் 16 பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிகிறது.
அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். டாஸ்மாக் மூலம் கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தற்போது கள்ளச்சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.
உடனடியாக தமிழக அரசு தூக்கத்தில் இருந்து விழித்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க தவறியதற்காக 3 காவல்துறை அதிகாரிகளை டிஜிபி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications