பாஜகவுக்கு குட்பை சொல்லும் அண்ணாமலை.. திடீரென டாட்டா காட்ட இது தான் காரணம்? குஷியான அண்ணாச்சி
சென்னை: தமிழக பாஜக 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் இந்த நேரத்தில், பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை எடுத்துள்ள முடிவு கட்சிக்குள் மட்டுமல்லாமல் தமிழக அரசியலேயே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்ததுள்ள நிலையில், இது உண்மையிலேயே தனிப்பட்ட காரணத்துக்கான முடிவா? அல்லது தான் அதிருப்தியில் இருப்பதை கட்சி மேலிடத்திற்கு மறைமுகமாக சொல்லும் செய்தியா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முதன் முறையாக கிட்டத்தட்ட பாதி கட்டுப்பாட்டில் பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் தான் திடீரென பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை.
கொங்கு மண்டலத்தில் ஆறு தொகுதிகளுக்கு அவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தான் அந்தப் பணியை கவனிக்க முடியாது எனக் கூறி பின்வாங்கி இருக்கிறார். அண்ணாமலை தனது முடிவுக்குக் காரணமாக, தந்தையின் உடல்நிலை சரியில்லை என்பதையே முன்வைத்துள்ளார்.

அண்ணாமலை பாஜக
குடும்பத்தை கவனிக்க வேண்டிய சூழல் இருப்பதால், தேர்தல் பொறுப்பாளராக தொடர முடியாது என்று அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால் இது முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமாக பார்க்கப்படவில்லை. காரணம், அரசியல் என்பது பொதுவாழ்க்கை. இதில் தனிப்பட்ட துயரங்களையும் கடந்து பல தலைவர்கள் செயல்பட்டுள்ள வரலாறு இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, பிரதமர் நரேந்திர மோடி தாயார் ஹீராபென் மோடி மறைவுக்குப் பிறகும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது அடிக்கடி சுட்டிக் காட்டப்படுகிறது.
தமிழக பாஜக
இதனால், அண்ணாமலை கூறிய காரணத்துக்கு பின்னால் வேறு அரசியல் பின்னணி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. அந்த பின்னணியில் முக்கியமாக பேசப்படுவது, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் - அண்ணாமலை இடையே நிலவி வரும் கருத்து மோதல் தான். மாநிலத் தலைவர் மாற்றம், கட்சியின் எதிர்காலம், கூட்டணி அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களில் அண்ணாமலையின் அணுகுமுறை மேலிடத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதே அரசியல் வட்டாரங்களில் நிலவும் பொதுவான கருத்து.
நயினார் நாகேந்திரன்
குறிப்பாக, அதிமுக கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலையின் நிலைப்பாடு கட்சி மேலிடத்தின் முடிவுக்கு எதிரானதாக இருந்ததாக கூறப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில், பாஜக தனியாக களம் இறங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அண்ணாமலை உறுதியாக எடுத்திருந்தார். அந்த தேர்தலில் அவர் தீவிரமாக செயல்பட்டு, பாஜகவிற்கு சுமார் 11 சதவீத வாக்குகளை பெற்றுக் கொடுத்தார். இது அவரது அரசியல் உழைப்பையும், தனிப்பட்ட செல்வாக்கையும் காட்டும் ஒரு முக்கிய தருணமாக அமைந்தது. ஆனால் அதற்கு பிறகு, அதிமுக உடன் கூட்டணி அமைப்பதே கட்சி மேலிடத்தின் முடிவாக மாறியது.
பாஜக உள்கட்சி மோதல்
இந்த மாற்றம் அண்ணாமலையின் அரசியல் எண்ணங்களுடன் ஒத்துப் போகாததாகவே பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, தேசிய அளவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாததே, அவரது அதிருப்தியை மேலும் அதிகரித்ததாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படும் நபர்களுக்கு அந்த தேர்தலில் சீட் வழங்கப்படாது என்ற கட்சிக்குள் நிலவும் நடைமுறையும், அண்ணாமலையின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அண்ணாமலை முடிவு
இந்த சூழலில், தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகுவது என்பது, தேர்தல் அரசியலிலிருந்து ஒரு அளவுக்கு ஒதுங்குவதற்கு சமம் என்றே பார்க்கப்படுகிறது. அண்ணாமலை முழுமையாக பிரச்சாரத்தில் இருந்து விலகுவாரா? அல்லது சில நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொள்வாரா ? என்ற தெளிவான பதில் இன்னும் இல்லை. ஆனால் இந்த முடிவு, கட்சி மேலிடத்திற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில், அண்ணாமலை போன்ற முகம் இல்லாமல் பாஜக களமிறங்குவது, கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழக அரசியல்
அதே நேரத்தில் அண்ணாமலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக பாஜக தமிழக அரசியலில் தொடர்ந்து பயணிக்கும் என்கின்றனர் பாஜகவினர். பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி தமிழிசை சௌந்தரராஜன், எல் முருகன், அண்ணாமலை வரிசையில் தற்போது நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக இருப்பதாகவும், ஆனால் பாஜகவில் இதுவரை இல்லாத அளவு தனிநபர் துதிப்பாடும் போக்கு அதிகரித்துள்ளதால் தான் அண்ணாமலையை பாஜகவே ஓரம் கட்டி உள்ளதாகவும் அண்ணாமலை சென்றால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கின்றனர் ஆதரவாளர்கள்.
-
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை! -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
1000 சவரன் தங்கம்.. மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் ஷாக் முரண்? திமுக புள்ளி சொல்வதென்ன -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த மன்சூரலிகான்.. கலைஞர் ஞாபகம் வந்துருச்சு சார்.. ஆடிப்போன போலீசார் -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
பாலில் விழுந்த மாம்பழம்.. அன்புமணி கைக்கு மொத்தமாய் போன பாமக! வலை போட்டு வேட்பாளர்களை தேடும் அய்யா! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி












Click it and Unblock the Notifications