சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்னபூரணி அன்னைக்கு அப்படி பேசினாரே.. செய்த வேலையை பார்த்தீங்களா.. இது உண்மையா?

அன்னபூரணி போலி முகவரி தந்துள்ளார் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கமிஷனர் ஆபீசில், அன்னபூரணி அவ்வளவு ஆவேசமாக அன்னைக்கு பேசினாரே.. அது தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று, தற்போது இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

Recommended Video

    Commissioner office-ல் பெண் சாமியார் அன்னபூரணி புகார் | Oneindia Tamil

    பளபளக்கும் பட்டுப்புடவையில், லிப்ஸ்டிக் சகிதம், மலர் மாலை சூடியபடி, அன்னபூரணி போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டிங் ஆகி கொண்டே இருக்கிறது..

    ஏராளமான பெண்கள், அவரை காண வழி மீது விழி வைத்து காத்திருக்க, திடீரென பக்தர்கள் முன் தோன்றி அருள்பாலிக்கிறார்.. பக்தர்களும், எங்கள் தாயே, அம்மா என்று முழக்கமிட, அன்னபூரணியும் ஆசி வழங்குகிறார்.

    அன்னபூரணி உருவாவதற்கு யார் காரணம்? அன்னபூரணி உருவாவதற்கு யார் காரணம்?

    பக்தர்கள்

    பக்தர்கள்

    கடவுளின் அவதாரம் என்றும், அதிபராசக்தியின் அம்சம் என்றும் அவரது பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.. எனினும், இவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் தரப்பட்டுள்ளன.. அதேபோல, அன்னபூரணியும் கடந்த வாரம், கமிஷனர் ஆபீசுக்கு வந்து, உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, தன்னைப் பற்றி தவறான தகவல்கள் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு தந்தார்.

    தீட்சதை

    தீட்சதை

    அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் சாமியார் என்று யாரிடமும் சொல்லவில்லை. நான் சாமியார் இல்லை. ஆன்மிகவாதி. என்னிடம் வருபவர்களுக்கு ஆன்மிகம் தொடர்பாக பயிற்சி கொடுத்து, தீட்சதை வழங்குகிறேன். நான் கடவுள் அவதாரம் இல்லை. ஆதிபராசக்தியின் அம்சம் என்றும் என்னை நான் சொல்லவில்லை.. கடவுள் என்றால் யார், அவரது சக்தி என்ன, நீ யார், நான் யார் என்பது பற்றி என்னிடம் வருபவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன். நான் அருள்வாக்கும் சொல்லவில்லை. எனது காலில் விழ வேண்டும் என்று யாரையும் வற்புறுத்தவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக ஆன்மிக பயணம் செய்கிறேன். எனது குடும்பம் பற்றியும் நான் சொல்லத் தேவையில்லை" என்று கூறியிருந்தார்.

    அட்ரஸ்

    அட்ரஸ்

    இந்நிலையில், அன்னபூரணி குறித்து ஒரு புது தகவல் வெளியாகி உள்ளது.. அன்றைய தினம் காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்னபூரணி அளித்திருந்த புகார் மனுவில், திருமுல்லவாயலில் திருமலைவாசன் பவுன்டேசன் குடியிருப்பில் K 402 என்ற முகவரியில் தான் தங்கி இருந்து, இயற்கை ஒளி அமைப்பின்மூலம் ஆன்மீக பணி செய்வதாக கூறியிருந்தார்.

     பயிற்சி வகுப்புகள்

    பயிற்சி வகுப்புகள்

    எனவே, அதற்கு பிறகு போலீசாரும் அந்த அட்ரசுக்கு சென்று விசாரித்துள்ளனர்.. ஆனால், அன்னபூரணி அங்கில்லையாம்.. வேறு 2 பேர் அங்கு வசித்து வந்துள்ளனர்.. அன்னபூரணி அந்த பகுதியை விட்டு சென்றே பல வருடங்கள் ஆவதாகவும், அங்கு ஆன்மீக பயிற்சி வகுப்புகள் எதுவுமே நடைபெறவில்லை என்பதும் போலீசாருக்கு அப்போதுதான் தெரியவந்ததாம்.. போலீசாரிடமே போலியான முகவரியை அன்னபூரணி ஏன் தர வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

     உண்மையா?

    உண்மையா?

    அதேசமயம், இந்த செய்தி உண்மைதானா என்றும் தெரியவில்லை.. ஏற்கனவே அன்னபூரணியின் காதல் கணவர் அரசு, மர்ம மரண வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்து கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகிறது.. இது தொடர்பாக அன்னபூரணியிடம் விசாரித்தால்தான் அனைத்து உண்மையும் தெரியவரும் என்கிறது போலீஸ் தரப்பு.

     திடீர் பல்டி

    திடீர் பல்டி

    இதனிடையே, புத்தாண்டையொட்டி திவ்ய தரிசனம் தரப்போவதாகவும், நோய்களை தீர்க்க போவதாகவும் சோஷியல் மீடியாவில் அன்னபூரணி ஏற்கனவே தெரிவித்து வந்த நிலையில், தான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.. மக்களுக்கு அருள்வாக்கு சொல்லவில்லை, ஆசியும் வழங்கவில்லை... தீட்சை மட்டும் தருகிறேன் என்று பதறி போய் அன்னபூரணி சொன்னதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

    English summary
    Annaporani says I am a spiritualist God is not an incarnation and another complaint against her
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X