சிவாஜி அன்னை இல்லம் வழக்கில் திடீர் திருப்பம்.. வழக்கு தொடர்ந்த நிறுவனம் எடுத்த புதிய முடிவு!
சென்னை: நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டு விட்டதாக கூறி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால், அன்னை இல்லம் வீடு ஜப்தி உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்யக்கூடாது என்று தனியார் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தனியார் நிறுவனம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டு விட்டதாக கூறி வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த். இவர் ஜகஜால கில்லாடி என்ற பெயரில் படம் தயாரிப்பதற்காக பிபரல தனியார் நிறுவனமான தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3 கோடி கடன் பெற்று இருந்தார். இந்த கடனை வட்டியுடன் திருப்பி தர கோரி அதாவது ரூ.9 கோடி தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் துஷ்யந்துக்கு எதிராக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதில் சென்னை உயர்நீதிமன்றம் மத்தியஸ்தம் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த மத்தியஸ்தர், "ஜகஜால கில்லாடி" படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கக் கோரி துஷ்யந்த் தரப்புக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவினை அமல்படுத்த வேண்டும் என்று தன்பாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், "அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினையும் வைத்து இருந்தது.
இந்த மனுவினை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதற்கிடையே இந்த வீடு எனக்கு சொந்தமானது என்றும், என் தந்தை சிவாஜி எனது பெயருக்கு உயில் எழுதி வைத்திருப்பதாகவும், எனவே இந்த வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், "அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளர் பிரபு என்பதால் ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்து அதிரடி உத்தரவினை பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தான் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "கடன் பிரச்னையில் நீதிமன்றத்துக்கு வெளியில் சமரச தீர்வு காணப்பட்டு விட்டது. எனவே இந்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதித்தனர். மேலும் இந்த வழக்கினையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
-
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி











Click it and Unblock the Notifications