1 மணி நேரம்தான் டைம்.. ஏ. ஆர் ரகுமானை கோபமாக்கிய புரளிகள்.. நோட்டீஸ் அனுப்ப 5 முக்கிய காரணம்
சென்னை: தனக்கு எதிராக எழுதப்பட்ட, வெளியிடப்பட்ட பொய்யான, தவறான செய்திகளை உடனே நீக்க வேண்டும்.. 1 மணி நேரம் டைம்.. அதற்குள் நீக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ. ஆர் ரகுமான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவரின் இந்த முடிவிற்கு பின் 5 முக்கியமான காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தது தேசிய அளவில் பரபரப்பை கிளப்பி உள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டு திருமண உறவை முறிப்பது என்பது இயல்பான விஷயம் கிடையாது. இதன் காரணமாக இந்த விவாகரத்து பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.

ஏ. ஆர் ரகுமான்: ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார்.
சாயிரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக அவரது அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். சட்ட ரீதியாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
வாழ்வில் ஏற்பட்ட வேதனை மற்றும் வலியின் காரணமாக பிரிவு முடிவை எடுத்ததாக சாய்ரா விளக்கம் அளித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான், சாய்ரா பானு தம்பதியருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில் விவாகரத்து.. இரண்டு தரப்பிற்கும் ஏற்பட்ட மனக்கஷ்டங்கள்.. பிரிவினைகள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
நோட்டீஸ்: இப்படிப்பட்ட நிலையில்தான் தனக்கு எதிராக எழுதப்பட்ட, வெளியிடப்பட்ட பொய்யான, தவறான செய்திகளை உடனே நீக்க வேண்டும்.. 1 மணி நேரம் டைம்.. அதற்குள் நீக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ. ஆர் ரகுமான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இருவரின் விவகாரத்து தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிட்டும் சில யூ டியூப் சேனல்கள், செய்தி தளங்கள் மோசமான, தவறான கற்பனைகளை செய்திகளால் வெளியிட்டு உள்ளன. நடக்காத விஷயங்களை தங்கள் கற்பனைகளாக வெளியிட்டு உள்ளன.
அதிலும் சில சேனல்கள் கொஞ்சம் கூட உண்மை இல்லாத செய்திகளை .. இரண்டு தரப்பையும் மன அளவில் பாதிக்க கூடிய செய்திகளை வெளியிட்டு உள்ளன. இதில் துளி கூட உண்மை இல்லை. இரண்டு தரப்பின் மனதையும் புண்படுத்தும் விதமாக மிக மோசமாக செய்திகளை வெளியிட்டு உள்ளனர்.
இதை அடுத்த 1 மணி நேரத்தில் நீக்க வேண்டும். இல்லையென்றால் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி செய்யாதவர்கள் மீது சட்ட ரீதியாக.. மானநஷ்ட வழக்கு பதியப்படும். அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ. ஆர் ரகுமான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
5 முக்கிய காரணம்: அவரின் இந்த முடிவிற்கு பின் 5 முக்கியமான காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
1. சில யூ டியூப் சேனல்கள் அவரின் பிரிவிற்கு காரணம் என்று கூறி சில தவறான பர்சனல் விஷயங்களை தவறாக குறிப்பிட்டு இருந்தனர்.
2. ஏ. ஆர் ரகுமானின் பிரிவை வேறு சில விவாகரத்து உடன் ஒப்பிட்டு சிலர் பொய்யான செய்திகளை வெளியிட்டு இருந்தனர்.
3. ஏ. ஆர் ரகுமானின் பிரிவை மதம் மாற்றம் என்று கூறி சிலர் பொய்யான செய்திகளை வெளியிட்டு இருந்தனர்.
4. அதேபோல் சிலர் இரண்டு தரப்பையும் கடுமையாக விமர்சனம் செய்து, கேலி செய்து செய்திகளை. வெளியிட்டனர்
5. இதெல்லாம் போக ஏ. ஆர் ரகுமானின் தனிப்பட்ட ஒழுங்கையும் சிலர் பொய்யாக விமர்சனம் செய்தது இந்த முடிவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications