"ஏஆர் ரகுமான் எனக்கு தந்தை மாதிரி.." உருக்கமாக சொன்ன மோகினி டே! சர்ச்சைகளுக்கு புல்ஸ்டாப்
சென்னை: ஏ.ஆர். ரகுமானின் இசைக்குழுவில் கித்தார் இசை கலைஞராக பணியாற்றி வரும் மோகினி டே என்பவர் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். ஏ.ஆர். ரகுமானின் விவாகரத்தையும், மோகினி டே விவாகரத்தையும் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களும், வீடியோக்களும் பரவி சர்ச்சை ஆனது. இதையடுத்து மோகின் டே வீடியோ வாயிலாக உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இசைப்புயல் ஏஆர் ரகுமானுக்கும் குஜராத்தை சேர்ந்த சாயிரா பானுவுக்கும் கடந்த 1995 ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற இரு மகள்களும் அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். ஏ ஆர் ரகுமான் - சாயிரா பானு ஜோடிக்கு திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில் கணவர் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக சாயிரா பானு அறிவித்தார்.

இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும் ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாயிரா பானு அறிவித்திருந்தார். ஏ ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, ஏஆர் ரகுமான் - சய்ரா பானு திருமண உறவு முறிந்ததாக அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவில் பணியாற்றிய பெண் இசைக்கலைஞர் மோகினி டேவும் அவரது கணவரை விவாகரத்து செய்வதாக கூறினார். ஏ.ஆர். ரகுமானின் இசைக்குழுவில் கித்தார் இசை கலைஞராக பணியாற்றி வந்த மோகினி விவாகரத்தையும், ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்தையும், தொடர்புப்படுத்தி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களும், வீடியோக்களும் பரவி சர்ச்சை ஆனது.
இந்த நிலையில், மோகினி டே வீடியோ வாயிலாக பரபரப்பு விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதவது:- எனது வாழ்வில் தந்தை ஸ்தானத்தில் வழிகாட்டியாக சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தர் தான் ஏ ஆர் ரகுமான். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். தந்தை ஸ்தானத்தில் அவரை வைத்திருக்கிறேன். எனக்கு அவர் தந்தை மாதிரி. என்னுடைய அப்பாவோடு சில வயது தான் ஏ ஆர் ரகுமானுக்கு குறைவு.
அவரது மகளுக்கும் சரியாக என்னுடைய வயது தான் இருக்கும். ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவில் நான் 8 ஆண்டுகளாக கிதார் கலைஞராக பணி செய்து வருகிறேன். என்னையும் அவரையும் இணைத்து வதந்திகள் பரவுகின்றன. அவற்றில் எதுவும் உண்மை கிடையாது. இந்த வதந்திகள் காயப்படுத்துகின்றன. எனவே கனிவாக நடந்து கொள்ளுங்கள். தயவு செய்து எங்களின் தனியுரிமையை மதிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார் .
இதற்கிடையே, தனக்கு எதிராக எழுதப்பட்ட, வெளியிடப்பட்ட பொய்யான, தவறான செய்திகளை உடனே நீக்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி செய்யாதவர்கள் மீது சட்ட ரீதியாக, மானநஷ்ட வழக்கு பதியப்படும். அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ. ஆர் ரகுமான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இருவரின் விவாகரத்து தொடர்பாக சில யூ டியூப் சேனல்கள், செய்தி தளங்கள் மோசமான, தவறான கற்பனைகளை செய்திகளால் வெளியிட்டு வந்தன. நடக்காத விஷயங்களை தங்கள் கற்பனைகளாக வெளியிட்டு உள்ளன. இதையடுத்துதான் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ. ஆர் ரகுமான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.












Click it and Unblock the Notifications