சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் அளித்த புகார்.. ஏ ஆர் ரகுமான் மேலாளர் விளக்கம்
சென்னை: அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் அளித்த புகாருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஏ.ஆர்.ரகுமானின் மேலாளரும், 'தி குரூப்' நிறுவன உரிமையாளருமான செந்தில் வேலன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அண்மையில் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டதால் பெரும் சர்ச்சையானது. இதன் காரணமாக தென் சென்னை முழுவதும் ஒரு நாள் இரவு போக்குவரத்து நெரிசலால் முடங்கியது. விழா நடந்த இடத்திலும் டிக்கெட் பெற்றவர்கள் உள்ளே நுழைய முடியாத நிலை இருந்தது. பலர் டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு சிலர் போலிடிக்கெட்டை பயன்படுத்தி உள்ளே வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்தின் இந்த குளறுபடிகளுக்கு ஏஆர் ரகுமானே முழுமையாக பொறுப்பேற்று பதில் அளித்தார். டிக்கெட் பணத்தை முழுமையாக திருப்பி அளிப்பதாகவும் உறுதி அளித்தார். அதன்படி பணமும் திருப்பி அளிக்கப்பட்டது.
இந்த சூழலில் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில்வளவன் மீது சென்னை காவல் ஆணையரிடம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
என்ன புகார்: கடந்த 2018ல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மாநாடு நடத்த சரியான இடம் மற்றும் அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெறாமல் போனது.
இதனிடையே இந்த இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.29.50 லட்சம் அட்வான்ஸ் தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறாத நிலையல், அந்த தொகையை திரும்ப தருமாறு ஏஆர் ரகுமானுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஆனால் முன்பணத்தை பெற்றுக்கொண்ட ஏ.ஆர்.ரகுமான் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது இந்த விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் தரப்பட்ட காசோலை, வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த புகாரில், கடந்த 2018ல் இசை நிகழ்ச்சி நடத்துவதாக ரூ.29.50 லட்சம் முன்பணம் பெற்று, திருப்பி தரவில்லை என றுவை சிகிச்சை நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மாநாடு நடத்த அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சிக்கான முன் தொகையை திருப்பி கேட்டதாகவும், அதனை தரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏஆர் ரகுமான் மேலாளர் விளக்கம்: இந்த சூழலில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் அளித்த புகாருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனஏ.ஆர்.ரஹ்மானின் மேலாளரும், 'தி குரூப்' நிறுவன உரிமையாளருமான செந்தில் வேலன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சங்கத்தினரிடம் இருந்து இசை நிகழ்ச்சி நடத்த ரூ.29.50 லட்சம் வாங்கப்பட்டது என்றும் பிறகு நிகழ்ச்சி நடத்துவதற்கான தொகை அதிகரிப்பதால், நிகழ்ச்சியை சங்கத்தினர் ரத்து செய்தனர் என்றும் செந்தில் வேலன் கூறியுள்ளார்.
மேலும் நிகழ்ச்சியை ரத்து செய்தாலும் முன்பணத் தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது என அக்ரீமெண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இவை எல்லா இசை நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என ஏ.ஆர்.ரஹ்மானின் மேலாளர் செந்தில் வேலன் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications