அரக்கோணத்துக்கு மேஜர் நியூஸ்.. மொத்தம் 9 மின்சார ரயில்களாம்.. நோட் பண்ணுங்க.. திடீர்னு வந்த அறிவிப்பு
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக ரயில்வே துறை பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது.. சமீபத்தில்கூட, ஐஆர்சிடிசி இணையதள டிக்கெட் முன்பதிவில், ரயில் நிலைய ஊர் பெயர்களை எளிதில் கண்டறியும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்போது, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் ரயில் நிலையங்களில் ஊர் பெயர்களை எளிதில்கண்டறியும் வகையில், மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. .

சிறிய ரயில் நிலையங்கள்: இந்த திட்டத்தின்படி, 175 நகரங்களில் உள்ள, 725 ரயில் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறிய ரயில் நிலையங்களை அடையாளம் காணும் வகையில், பிரபலமான பகுதிகள், நகரங்கள் ஆகியவை, அந்த சிறிய ரயில் நிலையங்களின் பெயருடன் இணைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, சென்னையை தேடும்போது, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் காண்பிக்கும். அதேபோல், முக்கிய நகர் பெயரை தேடும்போது, அங்குள்ள மற்ற ரயில் நிலையங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இத்துடன், பராமரிப்பு காரணங்களால், ரயில் புறப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால், அதற்கு பதிலாக மாற்று ரயில் நிலையத்தை காட்டியும் பயணிகளுக்கு இது உதவுகிறது என்று ரயில்வே அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள்: அதேபோல, பராமரிப்பு பணிகளையும் ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது மேற்கொள்வதால், அதுகுறித்த அறிவிப்புகளையும் உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது.
இந்த பணிகள் காரணமாக, சமீப நாட்களாகவே, தெற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே, மத்திய கிழக்கு ரயில்வே உள்ளிட்ட டிவிஷன்களில் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில்கூட, சத்தீஸ்கர் வழித்தடத்தில் இயங்கும் 12 ரயில்களை, பராமரிப்பு காரணமாக, இந்திய ரயில்வே ரத்து செய்திருந்தது.
தண்டவாளம் பாதுகாப்பு: தண்டவாளத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், இப்படி திடுதிப்பென்று 12 ரயில்களும் ஒரே நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியதையும் மறுக்க முடியாது. இந்நிலையில், தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அரக்கோணம் ரெயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தால் நாளை (புதன்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே இயங்கும் 9 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சிறப்பு ரயில்கள்: இதற்கு மாற்றாக பயணிகளின் வசதிக்கேற்ப குறிப்பிட்ட தேதிகளில் 9 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை (புதன்கிழமை) மற்றும் 30-ந்தேதியில் சென்னை சென்ட்ரல் புறநகர்- கடம்பத்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 8.20 மணிக்கும், காலை 11 மணிக்கும் இயக்கப்படும்.
மறுமார்க்கமாக கடம்பத்தூர்-சென்னை சென்ட்ரல் புறநகர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 10.25 மணிக்கும், காலை 11.35 மணிக்கும், பிற்பகல் 1.25 மணிக்கு இயக்கப்படும்.
அதேபோல் சென்னை சென்ட்ரல் புறநகர்-திருவள்ளூர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 9.10 மணிக்கும், காலை 10 மணிக்கும் இயக்கப்படும். மறுமார்க்கமாக திருவள்ளூர்- சென்னை சென்ட்ரல் புறநகர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 11.10 மணிக்கும், பகல் 12.35 மணிக்கும் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி: தாம்பரம் - வேளாங்கண்ணி இடையேயான சிறப்பு ரயில், வேளாங்கண்ணியில் இருந்து, வரும் 29ம் தேதி இரவு 10:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:10 மணிக்கு தாம்பரம் வரும் என்றும், இரவு 9:00 மணிக்கு புறப்படும் தாம்பரம் - வேளாங்கண்ணி, 28ம் தேதி சிறப்பு ரயில் சேவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தெற்கு ரயில்வே நாளைய தினம் 9 மின்சார ரயில்கள் ரத்து குறித்து அலர்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications