சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக ஆட்சியின் முக்கிய ஊழல் குறித்து பேசப்பட்ட ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியில் துவரம் பருப்பு டெண்டரில் ஊழல் செய்ய முயன்றதாக கிறிஸ்டி நிறுவனம் மீது அறப்போர் இயக்கம் அளித்த புகாரையடுத்து அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதை ராமன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளது. இதற்கு அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Raame Aandalum Raavane Aandalum movie review | Yes sa Busss sa | Filmibeat Tamil

    ராமே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும் திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படத்தில் நடிகை வாணி போஜன், குக் வித் கோமாளி ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளார்கள்.

    இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் டிரைய்லர் காட்சிகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இது ஜல்லிக்கட்டு பிரச்சினை குறித்தும் சமூக பிரச்சினை குறித்தும் பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகியுள்ளது.

    உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்? உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்?

    அரசியல் பேச்சு

    அரசியல் பேச்சு

    அண்மைக்காலமாக பெரும்பாலான படங்கள் அரசியல் பேசுவது போன்றே உள்ளன. அது போல் மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு இருக்கும் எதிர்ப்பு, வரவேற்பு போன்ற காட்சிகளும் இடம்பெறுகின்றன. அண்மையில் வெளியான சார்பட்டா பரம்பரையில் பாக்ஸிங் கலையை சரியாக வளர்த்தது திமுகவா, அதிமுகவா என்பது குறித்து பேசப்பட்டது.

    ராவணே ஆண்டாலும்

    ராவணே ஆண்டாலும்

    அது போல் இந்த ராமே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும் திரைப்படத்தில் அதிமுக ஆட்சியில் துவரம் பருப்பு டெண்டரில் 120 கோடி ஊழலில் ஈடுபட முயன்றதாக கிறிஸ்டி நிறுவனத்தின் மீது அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டால் அந்த டெண்டர் ரத்தானது குறித்து செய்தித் தாள் பேப்பர் கட்டிங்ஸ் காண்பிக்கப்பட்டுள்ளது.

    என்ன ஊழல்

    என்ன ஊழல்

    கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படும் பொருளில் மிகப் பெரிய ஊழல் நடப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. அதாவது மூன்று நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்றதாகவும் அதில் பருப்பு கிலோ ரூ 143.50 என அதிக விலைக்கு விற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    திமுக அரசு ரத்து

    திமுக அரசு ரத்து

    இந்த நிலையில் பழைய டெண்டரை திமுக அரசு ரத்து செய்துவிட்டு பல நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கும் அளவுக்கு டெண்டரை மாற்றி அமைக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. துவரம் பருப்பு டெண்டரில் 120 கோடி ஊழல் செய்ய முயன்ற கிறிஸ்டி நிறுவனத்தை விசாரிக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

    லஞ்ச ஒழிப்பு

    லஞ்ச ஒழிப்பு

    முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி உள்ளிட்டோரின் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டிய அறப்போர் இயக்கம் அவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்குள்படுத்தியதற்காக பாராட்டுகள் குவிகின்றன. இந்த நிலையில் ராமே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும் படத்திலும் இது போன்ற கிறிஸ்டி நிறுவனத்தின் ஊழலுக்கு முயன்ற நிலையில் அறப்போர் இயக்கத்தின் புகாரால் புதிதாக வந்த திமுக அரசு அந்த பழைய டெண்டரை ரத்து செய்தது குறித்து சொல்லப்பட்டுள்ளது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் பட இறுதியில் அறப்போர் புகாரில் ரத்து செய்யப்பட்ட கிறிஸ்டி பருப்பு ஊழல் குறித்து போடப்பட்டுள்ளது மகிழ்ச்சி. ஆனால் ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் கிறிஸ்டி மற்றும் அதிகாரி/ முன்னாள் அமைச்சர் மீது FIR போட்டு கருப்பு பட்டியலில் சேர்ப்பது கடினமே! என தெரிவித்துள்ளார்.

    English summary
    Arappor Jayaraman praises Raame Aandalum Raavane Aandalum for filming about Kristy company's tender cancel order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X