2 மேட்டர்கள்.. 7 "தலைகள்".. இது சசிகலா ஆட்டம்.. கதிகலங்கிய ஓபிஎஸ்.. மாஸ் பிளானில் எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுக்குள் 2 விதமான புகைச்சல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. இதனால் ஒரு பக்கம் ஓபிஎஸ்ஸுக்கு குடைச்சல், இன்னொரு பக்கம் எடப்பாடிக்கு டென்ஷன் என எகிறி கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டியளித்து தனது விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு முறையும் சின்னம்மா என்றே ஓபனாக சொல்லியது உட்பட அனைத்துமே அதிமுகவுக்குள் சர்ச்சைகளை ஏற்படுத்தியபடி இருக்கிறது.

முடிவுகள்

முடிவுகள்

சசிகலாவை ஆதரிக்கக் கூடாது என்று கட்சியின் உயர்மட்ட குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக நடந்து கொள்ளும் அதிமுகவினரை கட்சியில் கட்டம் கட்டப்படும் நிலையில், சசிகலாவை வெளிப்படையாக ஆதரித்துள்ள ஓபிஎஸ் மீது என்ன நடவடிக்கை? என்ற கேள்விகள்தான் கட்சிக்குள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.. இப்படிப்பட்ட சர்ச்சைகள் ஓபிஎஸ்சுக்கு எதிராக வீசப்பட வேண்டும் என்று ஓபிஎஸ்சுக்கு எதிரானவர்கள் கட்சிக்குள் தூண்டிவிடுவதாகவும் கூறப்படுகிறது.

 நொந்து போன ஓபிஎஸ்

நொந்து போன ஓபிஎஸ்

இதனால் ஓபிஎஸ் நொந்து போயுள்ளாராம்.. "உண்மையான தொண்டர்கள் என்னுடைய கருத்தில் மாறுபடவில்லை. இன்னும் சொல்லப்போனால், என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத்தான் பதில் அளித்தேனே தவிர நானாக வலிய சென்று சசிகலாவை ஆதரிக்கிறேன் என்று எங்கேயும் சொல்லவில்லை... எனக்கெதிரான சர்ச்சைகளெல்லாம் கட்சிக்குள் எனக்கு எதிரானவர்களால் தூண்டிவிடப்படுவை என்று தன்னிடம் பேசும் கட்சி சீனியர்களிடம் விவரித்து வருகிறாராம் ஓபிஎஸ்!

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

அதேபோல, எடப்பாடி பழனிசாமிக்கும் கட்சியில் சில விஷயங்கள் நடந்து வருகின்றன. அதாவது, அதிமுக உள்ள முக்குலத்தோர் சமூக சீனியர்களும் நிர்வாகிகளும் சசிகலாவின் ஆதரவாளர்களாத்தான் இன்னமும் இருக்கிறார்கள். அதை வெளிப்படையாக அவர்கள் காட்டிக்கொள்வதில்லை. அதேநேரம் வன்னியர் சமூக சீனியர்களையும் நிர்வாகிகளையும் தனது ஆதரவாளர்களாக வைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

 சிவி சண்முகம்

சிவி சண்முகம்

குறிப்பாக, சசிகலாவையும் முக்குலத்து கட்சி பிரமுகர்களையும் சமாளிக்க வன்னியர் சமூக தலைவர்களான மாஜி அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் எடப்பாடிக்கு வெகுவாக பலனளித்து வருகிறார்கள். எனவே, அவர்களை ஆதரவாளர்களாக சேர்த்து கொள்ள வேண்டும் என்ற மெசேஜ் சசிகலாவுக்கு போயுள்ளதாம்.

மாஜிக்கள்

மாஜிக்கள்

அதாவது, "நீங்கள் சம்பந்தப்பட்ட வன்னியர் சமுதாய மாஜிக்களை தொடர்பு கொண்டு பேசுங்கள்... அவர்களாக நம்மிடம் வரட்டுமே என எதிர்பார்ப்பது இப்போதைக்கு தேவையில்லை. நீங்கள் பேசினால் கண்டிப்பாக மெல்ட்டாகி விடுவார்கள். வன்னியர் தலைவர்கள் உங்கள் பக்கம் வந்துவிட்டாலே, பாதி பலத்தை இழந்து விடுவார் எடப்பாடி பழனிசாமி.. இவர்கள் இருக்கும் தைரியத்தில்தான் அப்படியெல்லாம் பேசி கொண்டிருக்கிறார்.

 விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

இது தவிர, அவரை இதுவரை ஆதரித்து வந்த கொங்கு சமூகத்தினர் கூட தற்போது எடப்பாடியிடம் முரண்பட்டுள்ளனர். மாஜிக்களான செங்கோட்டையன், கரூர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் கூட எடப்பாடியின் தலைமையில் பெரிதாக ஒட்டுதல் இல்லாமல்தான் உள்ளனர்... வன்னியர் தலைவர்களை உங்கள் பக்கம் ஈர்த்து விட்டால் கொங்கு சமூக முக்கிய நிர்வாகிகளும் உங்கள் பக்கம் வந்து விடுவர். அப்போது எடப்பாடியின் முழு பலமும் அடிபட்டுப் போகும்.

அரசியல்

அரசியல்

அவர் தனிமைப்படுத்தப்பட்டு விடுவார். அந்த நிலை உருவாகும்போது, அதிமுக ஆட்டோமேட்டிக்காக உங்கள் கைகளுக்கு வரும் என சசிகலாவுக்கு மெசேஜ் அனுப்பி வைத்திருக்கிறார்கள் அதிமுகவிலுள்ள சிலர்.. இதை எப்படி அவர் பயன்படுத்தப் போகிறார் என்பதில்தான் இருக்கிறது சசிகலாவின் அரசியல் என்று சொல்கின்றனர். இதை எடப்பாடி பழனிச்சாமியும் அறிந்து வைத்துள்ளார். முதல்கட்டமாக கே.பி.முனுசாமி உள்ளிட்ட வன்னியர் மாஜிக்களுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் காரியத்தில் எடப்பாடி இறங்கியுள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+