"2 ராஜாக்கள்".. அதிமுகவும் இல்லையாம்.. அமமுகவும் இல்லையாம்.. இது புதுஸ்ஸாம்.. சசியின் ஆட்டம் ஆரம்பம்
புதிய மாநாடு ஒன்றை நடத்த சசிகலா திட்டமிட்டு வருகிறாராம்
சென்னை: சகிகலா, அதிமுகவை எப்போது கைப்பற்றுவார்? அமமுக குறித்து என்ன முடிவு எடுப்பார்? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டுமே இல்லாமல் வேறு ஒரு விஷயத்தை கையில் எடுக்க போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கைது என்பது எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்றாலும், எதிர்பாராத பல சிக்கல்கள் அதிமுகவுக்குள் திடீரென எழுந்துவிட்டது..
ஊழல் தொடர்பான புகார்களில் மட்டுமே அதிமுக மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜெயக்குமார் கைதானது அதிமுகவுக்கு அதிர்ச்சிதான்..

ஜெயக்குமார் விஷயம்
அதிலும் இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்குள்ளேயே நுழைந்து கைது செய்ததை அதிமுக தலைவர்கள் அதிர்ந்து போய் பார்த்தனர்.. ஜெயக்குமார் கைது சம்பவம் நடக்கும் இதே நேரம்தான், ஒற்றை தலைமை விவகாரமும் மறைமுகமாக நடந்து கொண்டிருந்தது.. புழலுக்கு தனியாகவே சென்று ஜெயக்குமாரை சந்தித்தார் எடப்பாடி.. போராட்டத்திலும் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை.

ஜெயக்குமார் வீடு
மற்றொருபக்கம், தேனியில் அதிமுக கூட்டம், சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம், ஓ.ராஜா சந்திப்பு என அடுத்தடுத்த பகீர்கள் கிளம்பி, தொண்டர்களை கிறுகிறுக்க வைத்துவிட்டது.. இறுதியில் எடப்பாடி தரப்பு ஓரளவு இறங்கி வந்ததாகவும், ஓபிஎஸ்ஸையும் அரவணைத்து செல்ல முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.. மகளிர் தின விழாவில் இனிப்புடன் சேர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடியதே இதற்கு சாட்சியாகும்.. பிறகு ஜெயக்குமார் விடுதலையான பிறகு, அவரை சந்திக்க, எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்ஸூம் இணைந்தே சென்றதுடன், தங்கள் உறவை மேலும் பலப்படுத்தி கொண்டுவிட்டனர்.

ரகசிய சந்திப்பு
இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவுக்கு மேலும் அப்செட்டை தந்துவிட்டதாக கூறப்படுகிறது.. டெல்லி மேலிடத்தில் இருந்தும் சிக்னல் வராமல், தன்னுடைய முயற்சிக்கும் போதிய பலன் கிடைக்காமல், அடுத்து என்ன செய்வது என்ற முடிவில் இறங்கி உள்ளார்.. அதன்படிதான், ஒருமாநாடு நடத்த முடிவு செய்துள்ளாராம்.. அதாவது, அதிமுக மேலிட தலைவர்களிடம் கடந்த வாரத்தில் 2,3, ரகசிய சந்திப்புகள் நடந்தன.. அதேபோல, சசிகலாவை இதுவரை சந்தித்து பேசிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியவர்கள்தான்.

ஓ.ராஜா
சில தினங்களுக்கு முன்பு, விழுப்புரம் செரிஃப், திண்டிவனம் சேகர் உள்ளிட்டோரும் சந்தித்து பேசியுள்ளனர்.. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜாகூட சந்தித்தார்... சசிகலாவைச் சந்தித்த அனைவரையும் எடப்பாடி தரப்பு, ஓபிஎஸ்ஸை பெரும்பான்மை ஆதரவைக் காட்டி கையொப்பம் வாங்கி நீக்கிக்கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அடுத்த பிளானை யோசித்து வருகிறாராம் சசிகலா.

சுற்றுப்பயணம்
தற்போது சுற்றுப்பயணங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், எப்படியும் தன்னுடைய ஆதரவாளர்களை நேரடியாக சந்திக்க உள்ளதாக தெரிகிறது.. அந்த வகையில் அத்தகைய அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. இந்த ஆலோசனையில் பங்கேற்றவர்களையும், எடப்பாடி தரப்பு கட்சியில் இருந்து நீக்கவே செய்யும்.. அதனால், கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களை வைத்தே ஒரு மாநாடு நடத்தினால் என்ன என்பதே சசியின் மெகா அஸ்திரமாக இருக்கிறதாம்.

அன்வர் ராஜா
இதுவரை யாரையெல்லாம் கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்களோ, அவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் வேலையும் நடக்கிறது.. இது சம்பந்தமாக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, ஓ.ராஜா, பெங்களூர் புகழேந்தி, போன்றவர்கள் சென்னையில் சந்தித்து பேசியிருக்கிறார்களாம்.. அப்போதுதான் இந்த மாநாடு ஐடியா வந்ததாக சொல்கிறார்கள்.. இதைதவிர அதிமுகவுடன் அதிருப்தியாளர்கள் யார் என்ற லிஸ்ட்டும் எடுக்கிறார்கள்..

அன்வர் ராஜா
இவர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு மாநாடு போட்டால், நிச்சயம் அதிமுக மேலிடம் ஓரளவு பணியும் என்றும், அதன்மூலம் சசிகலாவின் மவுசு எகிறும் என்றும் நம்பப்படுகிறது.. அன்வர் ராஜாவை பொறுத்தவரை, சசிகலாவுக்கு ஆதரவாக பேசி கட்சியை விட்டு நீக்கப்பட்டர் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இதுவரை அவர் வாய் திறக்காமல் இருக்கிறார்.. யாருக்கும் வெளிப்படையாக ஆதரவு தராமல் உள்ளார்.. எனினும் தற்போது இந்த தகவல்கள் கசிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. இந்த ஐடியாவெல்லாம் சாத்தியமா? ஒர்க் அவுட் ஆகுமா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியும்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications