விஜயகாந்தின் "கன்னத்தை" கிள்ளி.. அட, ஓட்டு வங்கி அங்கிட்டு போகுது போல.. பாஜக கண்ணை உறுத்தியது இதுவா?
சென்னை: தேர்தலை எதிர்நோக்கி ஜரூர் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறது மேலிட பாஜக.. அந்தவகையில், தமிழகத்திலும் அதன் பார்வை திரும்பியிருக்கிறது.. அதுவும், தேமுதிகவில் அழுத்தமாகவே குறி விழுந்திருக்கிறது.. இது தொடர்பாக ஸ்பெஷல் நியூஸ் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
பாஜக மேலிடத்தை பொறுத்தவரை, தேமுதிக விஜயகாந்த் மீது தனி பாசம் வைத்திருக்கிறது.. நிறைய மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறது... அதுவும் பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் என்றால், அலாதி ப்ரியம் உண்டு..

பிரேமலதா: ஒருமுறை பிரதமர் மோடி, விஜயகாந்த்தின் கன்னத்தை தட்டி பாராட்டியதை, தமிழகமே அன்று ஆச்சரியமாக பார்த்தது.. அதேபோல பிரேமலதாவின் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரங்களும், பாஜக மேலிடத்தை ஈர்த்து விடும்.. இதெல்லாம் தேமுதிகவை கைவிடாமல், பாஜக தன்னுள் இறுக்கமாக வைத்திருக்கிறது என்கிறார்கள்.
கடந்தமுறை தேர்தலின்போதுகூட, தேமுதிகவை மட்டுமாவது கூட்டணிக்குள் சேர்த்து கொள்ளும்படி, எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக தலைமை வலியுறுத்தியது.. ஆனால், எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக மறுத்துவிட்டார். அந்தவகையில் கூட்டணியும், அந்த கூட்டணி கட்சிகளை கையாண்ட விதமும்தான், அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்களும் கருத்து கூறியிருந்தார்கள்.
பாஜக: அந்த அளவுக்கு தேமுதிகவுக்கான ஆதரவை பாஜக தந்து வருகிறது. அதற்கேற்றவாறு தேமுதிகவும், பாஜகவை எதிர்த்து எந்தவிதமான விமர்சனங்களையும் வெளிப்படுத்தியதில்லை.. குறையும் சொன்னதில்லை.. குற்றச்சாட்டையும் வைத்ததில்லை. ஒருவித இணக்கமான போக்கு இரு தரப்பிலுமே நிலவி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், விரைவில் தேர்தல் வரப்போகிறது.. ஜனவரி மாதம்தான் கூட்டணி பற்றி அறிவிப்போம் என்று பிரேமலதா ஏற்கனவே உறுதியாக சொல்லிவிட்டார்.. ஆனால், எதிர்பாராத விதமாக விஜயகாந்தின் மரணம், தேமுதிகவை நிலைகுலைய வைத்துவிட்டது. விஜய்காந்தின் இறுதி அஞ்சலிக்கு செல்ல சென்னைக்கு வர திட்டமிட்டிருந்தாராம் பிரதமர் மோடி.
துக்க விழா: ஆனால், ராமர் கோவில் திறந்து கும்பாபிஷேகம் செய்கிற சூழலில், ஒரு துக்க நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேதம் கற்றறிந்த ஆச்சாரியர்கள் சொல்லிவிட்டார்களாம். அதனால்தான், விஜய்காந்த் இறுதி சடங்கிற்கு வருவதை தவிர்த்துவிட்டாராம் மோடி. அதேசமயம் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பலரையும் அனுப்பி வைத்திருந்தார். இறுதிச்சடங்கில் முழு நேரமும் இருந்து அஞ்சலி செலுத்தினார் பொன்.ராதாகிருஷ்ணன்.
விஜய்காந்த் நிகழ்வை தவிர்த்திருந்தாலும், அவரை பற்றி சோஷியல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் பிரதமர் மோடி.. அதுமட்டுமல்லாமல், திருச்சிக்கு வந்த மோடி, விஜய்காந்தை பெருமைப்படுத்தியும் பேசியிருந்தார்.. விஜய்காந்த்தின் இறுதி ஊர்வலத்தில் தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் விஜய்காந்திற்காக உருகியதை கவனமாக கவனித்திருக்கிறது மத்திய உளவுத்துறை.
ஹை லெவல்: அதனையடுத்தே, விஜய்காந்தை புகழ்ந்து பெருமைப்படுத்தினாராம் மோடி.. அதுமட்டுமல்ல, விஜய்காந்திற்கான "ஓட்டு வங்கி"யை பாஜக பக்கம் கொண்டு வருவதற்காக, தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க முடிவு செய்துள்ளதாம் பாஜக தலைமை.
இந்த நிலையில், விஜய்காந்தை பெருமைப்படுத்தும் வகையில், மத்திய அரசு சார்பில் முக்கிய விருது ஒன்றை அறிவிக்கவும் டெல்லி ஆலோசிக்கிறதாம். தேமுதிக வட்டாரத்தில் இதுதான் ஹை-லெவல் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications