"ரகசியம் கசிந்தது".. எடப்பாடிக்கு இப்படி ஒரு சிக்கலா.. "ஆடியோ" வேற வர போகுதாமே.. அப்ப அவ்ளோதானா?
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் டீம் ஆடியோ ரிலீஸ் செய்ய போவதாக சொல்கிறது
சென்னை: எடப்பாடி டீமுக்கு கலக்கம் தரும் அளவுக்கு, முக்கிய தகவல் ஒன்றை ஓபிஎஸ் டீம் தெரிவித்துள்ளது, அதிமுகவை மேலும் சலசலப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
2 நாளைக்கு முன்பு, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில அரசை விமர்சித்தும், குற்றஞ்சாட்டியும் அதிமுக தலைவர்கள் பேசினார்கள்.
அதேசமயம், ஓபிஎஸ்ஸையும் அட்டாக் செய்ய தவறவில்லை.. மேலும், போகிற போக்கில் பாஜகவின் தலையிலும் ஒரு குட்டு வைப்பது போல சில சீனியர்கள் பேசியதையும் கேட்க முடிந்தது. இதில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது, மாஜி அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுதான்..

ரவீந்திரநாத்
ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தும்போதே, இது ஒரு சீண்டலாகவே பார்க்கப்பட்டது.. உதயகுமார் பேசும்போது, "தேனி மக்களவை தொகுதியில் உண்மையான அதிமுக தொண்டர்களின் கடும் உழைப்பால் ஓபிஎஸ் மகன் ஓ பி ரவீந்திரநாத் எம்பியாக வெற்றி பெற்றார். நான் சவால் விடுகிறேன், இப்போது தேர்தல் நடத்தி அதில் ஓபி ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? அப்படி அவர் வெற்றி பெற்றால், நான் அரசியலை விட்டே விலகுகிறேன்...

துரோக சிரிப்பு
ஓபிஎஸ் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கிறார் என்கிறார்களே, ஆனால் அது துரோக சிரிப்பு.. கட்சி தலைமை இடத்தை சூறையாடிய ஓபிஎஸ் வீட்டை நாங்கள் சூறையாடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். உதயகுமாரின் பேச்சு, எதிர்பார்த்தது போலவே, ஓபிஎஸ் டீமில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. இதையடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..

வெங்கடேஷ்
அப்போது அவர் பேசியபோது, ஆர்.பி.உதயகுமார் காலங்காலமாக அதிமுகவில் இருந்த நிர்வாகி கிடையாது.. ஏதோ ஒரு விபத்தில் அதிமுகவிற்கு வந்துவிட்டவர்.. அதன்பிறகு அம்மாவையும், சசிகலாவையும் ஏமாற்றி டாக்டர் வெங்கடேஷ் மூலமாக பதவியை பெற்று அமைச்சரானவர்.. இப்போது, ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் அவருக்கு கிடையாது. ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறாகள்.. அவைகள் மட்டும் நிரூபிக்கப்பட்டால் காலம் முழுவதும் அவர் ஜெயிலில் தான் இருப்பார்..

ஓபி ரவீந்திரநாத்
முதலில் இரட்டை தலைமைதான் வேண்டும் என்று துதி பாடியவரே இவர்தான்.. பிறகு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று இன்னொரு துதி பாடினார்.. இப்படி ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவரையும் பிடித்து மாறிமாறி பேசிக்கொண்டு வருகிறார். உதயகுமாருக்கு இருப்பது வாயா அல்லது கூவமா?ன்னே தெரியல.. அம்மாவுக்கு கோயில் கட்டுகிறேன் என்று சொல்லி, உதயகுமார் வீட்டில் இறப்பவர்களை அங்கு கொண்டு வந்து புதைத்து அதனை சமாதியாக மாற்றி வருகிறார்.

ஆடியோ
ஓபிஎஸ்சின் மகனை ராஜினாமா செய்ய சொல்கிறாரே, திருமங்கலம் தொகுதியில் உதயகுமார் ராஜினாமா செய்து விட்டு மறுபடியும் அதே இடத்தில் போட்டியிட அவர் தயாரா? அப்படி மட்டும் அவர் ஜெயித்து விட்டால் நான் இந்த அரசியலில் இருந்து வெளியேறி விடுகிறேன்.. பொன்னையன், அது தன்னுடைய ஆடியோ இல்லை என்று சொன்னால், இன்னொரு ஆடியோ வெளியிடுகிறேன்... ஆனால், இன்னைக்கு நாள் சரியில்லை.. அதனால், நல்ல நாளாக பார்த்து மேலும் சில ஆடியோக்களை வெளியிடுகிறேன் என்றார்.
Recommended Video

சேலஞ்ச்
ஆர்பி உதயகுமார் ஒரு சேலஞ்ச் செய்தால், அவரே அசந்து போகும் அளவுக்கு கிருஷ்ணமூர்த்தி இன்னொரு சேலஞ்ச் செய்துள்ளார்.. அதுவும் இல்லாமல், ஆடியோ வர போவதாக சொல்வதால், அது என்ன ஆடியோவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும், கலக்கமும் அதிமுகவில் சூழ்ந்துள்ளது.. இப்படி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த சச்சரவு, போட்டிகளால், ரத்தத்தின் ரத்தங்கள் சோர்ந்து போய் வருகின்றார்களாம்..

புகழேந்தி
அன்று வெளியாகி இருந்த ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்று பொன்னையன் ஏற்கனவே மறுப்பு சொல்லி இருந்தார்.. இதுபோக, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, ஆடியோ குறித்து ஒரு விளக்கமும் தந்திருந்தார்.. எனினும், பொன்னையன் ஆடியோ போல் விரைவில் இன்னும் பல ஆடியோகள் வெளிவரும், ஒரே நேரத்தில் அனைத்தையும் வெளியிட கூடாது என்று பொறுமையாக இருக்கிறோம், விரைவில் ஒவ்வொன்றாக வெளியிட போகிறோம் என்று அடுத்த நாளே மூத்த தலைவர் புகழேந்தி சொல்லியிருந்தார்.

வாய்ஸ் யாருடையது?
இந்நிலையில், கன்னியாகுமரி அதிமுக நிர்வாகி கோலப்பன், தனியார் டிவிக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "என்னுடன் பேசி வெளியான ஆடியோவில் இருப்பது பொன்னையன் குரல் தான்... கடந்த 9-ம் தேதி பொன்னையனுடன் நான் பேசினேன். ஆடியோவில் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பொன்னையனுடயது தான்... பொன்னையனை அவமானப்படுத்தவேண்டும் என்பதற்காக ஆடியோவை பதிவு செய்யவில்லை. எடப்பாடியை 100 சதவீதம் தொண்டர்கள் ஏற்கவில்லை என்று பொன்னையன் கூறினார்... அதனால்தான் வெளியிட வேண்டி வந்தது என்று மீண்டும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications