"ஓவர் ஓவர்".. அச்சாரம் போட்டாச்சா.. "மாறுதா" கூட்டணி.. அவர் அங்கே + இவர் இங்கே.. குறுக்கே வாரிசு வேற
வரும் எம்பி தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி முடிவுகள் உறுதியாக தெரியவில்லை
சென்னை: வரும் எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதற்கான களமும் சூடாகி கொண்டிருக்கின்றன.. எந்த கட்சி எந்த கூட்டணியில் சேரப்போகின்றன என்ற அனுமானங்களும், எதிர்பார்ப்புகளும் கூடிவருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக மா.செ.கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு மிகுந்த கவனத்தை, இன்னமும் பெற்று வருகிறது..
"கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். இந்த முறை 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்குங்கள். வலுவான கூட்டணியுடன்தான் நாம் போட்டியிடுவோம். கூட்டணி தொடர்பாக, தேர்தல் நேரத்தில் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அடிப்படைப் பணிகளை மேற்கொள்ளுங்கள்" என்று கூறியிருந்தார்.

சக்ஸஸ் A
திமுக கூட்டணியை பொறுத்தவரை வலுவாகவே உள்ளது.. "திமுகவுடன் விசிக வலுவாகவே உள்ளது" என்று திருமாவளவன் இதுவரை 4 முறை சொல்லிவிட்டார்.. ஆனால், திருமாவளவனை போல, திடமாகவும், உறுதியாகவும், கம்யூனிஸ்ட்டும், காங்கிரசும் அடித்து சொல்லவில்லை.. கருத்தியலில் ஓரணியில் இருந்தாலும், ஒருசில அதிருப்திகளால், அல்லது எதிர்பார்ப்புகளால் இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை.. காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரியை பொறுத்தவரை, "காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது" என்று ஒரு செக் வைத்துள்ளார். அதுமட்டுமல்ல, இந்த முறை திமுக கூட்டணியில், நிறைய கேட்களை கேட்டு வாங்குவோம்" என்று சொல்லி மிரள வைத்துள்ளார்.

சக்ஸஸ் B
எப்படியும் கடந்த முறை 10 சீட்டுக்களை அள்ளி தந்ததுபோல, இந்தமுறை திமுக காங்கிரசுக்கு தராது என்றே சொல்கிறார்கள்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கம்யூனிஸ்ட்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று ஒரு தகவல் வந்தது.. அதற்கு பிறகு அது என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.. மதிமுகவை பொறுத்தவரை, திமுகவுடனேயே சேர்ந்து பயணிக்கக்கூடும் என்கிறார்கள். பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்தும் தேசிய அளவிலான முயற்சியில், ஸ்டாலின் இறங்கி வருகிறார்.. அந்தவகையில், தற்போதுள்ள திமுக கூட்டணி பலமாகவே இருந்தாலும் மேலும் சில கட்சிகளையும் இணைத்து கூட்டணியை சந்திக்க முடிவாகி உள்ளதாகவே தெரிகிறது.

விஜயகாந்த்
அதுதான் மா.செ.கூட்டத்தில் முதல்வர் பேசிய பேச்சில் இருந்து கணிக்க முடிவதாக தெரிகிறது. அப்படி பார்த்தால், மநீம, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் கூட்டணியில் இணையக்கூடும் என்கிறார்கள்.. மநீமய்யத்தை எப்படியாவது பேசி கூட்டணிக்குள் கொண்டுவந்து விட வேண்டும் என்ற அசைன்மெண்ட் உதயநிதியிடம் தரப்பட்டுள்ளதாம்.. அதற்கான பேச்சுவார்த்தையும் ஓடிக் கொண்டிருப்பதாக தெரிகிறது..

ஈரமனசு
தேமுதிகவை பொறுத்தவரை, எப்படியும் திமுகவுடன் கூட்டணி வைத்தால்தான், கட்சியை சரிவில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்று தேமுதிக நிர்வாகிகளே ஆசைப்படுவதாக ஒரு பேச்சு எழுந்தது. ஆனால், நேற்றைய தினம் வேறு மாதிரியான தகவல்கள் வெளியாகின.. "ஸ்டாலின் நல்லாட்சி கொடுப்பார் என்று நினைத்து திமுகவுக்கு மக்கள் வாக்களித்து விட்டனர். அது பொய்த்துப் போய்விட்டதாக இப்போது மக்கள் நினைக்கின்றனர். எனக்கு வருகிற தகவல்படி, திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது.. அதனால் மக்கள் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அது நம்ம கட்சியாக கூட இருக்கலாம். இந்த தேர்தலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அர்ப்பணிப்பை காட்டுங்கள் என்றாராம். அப்படியானால் திமுகவுடன் தேமுதிக இணைவது டவுட் என்றே தெரிகிறது.

தோட்டத்திலே
பாமகவை பொறுத்தவரை, மிகவும் பலம் வாய்ந்த கட்சி.. குறிப்பிட்ட ஓட்டு வங்கியை தன்னகத்தே வைத்திருக்கும் கட்சி.. களத்தில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்ககூடிய கட்சி.. திமுகவுடன் இந்த முறை கூட்டணி வைக்க விருப்பமும் கொண்டிருப்பதாக தெரிகிறது.. திமுக அரசை மட்டுமல்ல, விசிகவையும் விமர்சிக்காமல் உள்ளது.. முதல்வர் ஸ்டாலினுடன் இணக்கமான போக்கையே பாமக மேற்கொண்டும் வருகிறது.. ஆனாலும், கூட்டணியில் இணைக்க திமுக மேலிடம் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.. ஒருவேளை பாமக உள்ளே வந்தால், விசிக வெளியேறிவிடும் என்று திமுக நினைப்பதாக இருக்கலாம்..

டாக்டர் ஐயா
ஆனால், வலிமை பொருந்திய பாஜகவை எதிர்க்க வேண்டுமானால், சொந்த விருப்பு - வெறுப்புகளை எல்லாம் ஒரு ஓரமாய் தள்ளி வைத்துவிட்டு, அனைவருமே ஓரணியில் திரண்டால் மட்டுமே சாத்தியமாகும் என்பதே தற்போதைய அரசியல் சூழலாக உள்ளது.. அந்தவகையில், விசிகவை சமாதானப்படுத்தி, பாமகவையும் உள்ளே கொண்டு வரும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.. பாமகவை தவறவிட்டால், நிச்சயம் அதிமுகவுடன் கூட்டணி சேரவே வாய்ப்பாகும்.. அதிமுக பலம்பொருந்திய கூட்டணியானால், அது பாஜகவுக்கே சாதகமாக அமையக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.

சுனில் + மிதுன்
எடப்பாடி என்ன முடிவெடுக்க போகிறார் என்பது தெரியவில்லை.. பாஜக அல்லாத கூட்டணியை முடிவெடுத்தால், நிச்சயம் காங்கிரசுடன் எடப்பாடி பழனிசாமி சேர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. காரணம், காங்கிரஸுடன் கூட்டணிக்கு எடப்பாடி முயற்சிக்கிறார் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்..

மிதுன் ப்ளான்
அந்த பேட்டியில், "எடப்பாடிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தருபவர் சுனில் என்பவர்தான்.. அந்த சுனில்தான், அகில இந்திய காங்கிரசில் ஒரு பிரதான பிரமுகர் ஆகிவிட்டார்.. அந்த சுனிலும், எடப்பாடி மகன் மிதுனும் நெருங்கிய மகன்கள்.. காங்கிரஸ் கட்சி தென்மாநிலங்களில், பாஜகவுக்கு வெற்றி கிடைத்துவிடக்கூடாது என்று நினைக்கிறது.. வடமாநிலங்களில் விழுந்துள்ள சரிவை தென்மாநிலங்களில் பெற பாஜக முனைக்கிறது.. இந்த வெற்றியை தடுக்க காங்கிரஸ் தடுக்க நினைக்கிறது. அங்குள்ள சுனிலும், இங்குள்ள மிதுனும் நட்பாக இருக்கக்கூடிய சூழலில், பாஜகவுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை தடுப்பதற்காக, தன் வெற்றியை தானே உடைத்துக் கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்றார்.

அனல் களம்
ஆக, தேர்தலுக்கு இன்னும் நிறைய டைம் உள்ள நிலையில், திமுக கூட்டணியும் உறுதியாகவில்லை.. அதிமுக கூட்டணியும் உறுதியாகவில்லை என்றாலும், ஏகப்பட்ட அனுமானங்களும், எதிர்பார்ப்புகளும் களத்தை அனலாக்கி வருகின்றன.. எடப்பாடி பழனிசாமி கூட்டணி தொடர்பாக என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை வைத்தே, திமுகவின் பலம் கணிக்கப்படும் என்ற நிலைமையும் இங்கு உருவாகி உள்ளது.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..












Click it and Unblock the Notifications