Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீஸ் பீஸா போச்சே.. ஓபிஎஸ் "புள்ளி" வைக்க.. சசிகலா "கோலம்" போட.. செம ஷாக்கில் எடப்பாடி.. ஓஹோ.. பாஜகவா

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை உண்டுபண்ண, ஓபிஎஸ் & சசிகலா டீம் களம் இறங்கி உள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் டீம் ஒரு மேட்டரை கையில் எடுக்க, அதற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளதாம் சசிகலா டீம்.. எடப்பாடி பழனிசாமிக்கு தற்சமயம் குடைச்சலை தரக்கூடிய செய்தி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

தமிழகத்தில் இந்த முறை 10 முதல் 10 எம்பி சீட்டுக்களையாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.. அதற்காகவே அதிமுகவின் இணக்கத்தை விரும்புகிறது..

கடந்த சில மாதங்களாகவே, அதிமுகவின் உட்விவகாரங்களில் பாஜக தலையிடாத நிலையில், தற்சமயம், இவர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக மறைமுக அழுத்தம் தரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

பாஜக இந்த விஷயத்தில் தலையிட துவங்கியதாக தகவல்கள் மீடியாக்களில் கசிந்ததுமே, ஓபிஎஸ் டெல்லிக்கு செல்கிறார், பிரதமர் மோடி, அமித்ஷா இருவரையும் சந்தித்து பேச போவதாக வைத்திலிங்கம் பேட்டி தந்தார்.. ஆனால், இதுவரை ஓபிஎஸ்ஸின் டெல்லி பயணம் எப்போது என்று தெரியவில்லை.. அதேசமயம், தொண்டர்கள் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ, கட்சியின் 95 சதவீத ஆதரவை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளது மிகப்பெரிய பலமாக தற்சமயம் உள்ளது..

 மாறும் ரூட்டு

மாறும் ரூட்டு

எடப்பாடி பழனிசாமியுடனான அதிருப்திகள் ஏராளமாக பாஜக மேலிடத்துக்கு இருந்தாலும், அவ்வளவு சீக்கிரம் எடப்பாடி பழனிசாமியை ஒதுக்கிவிடாது என்றும் சொல்லப்படுகிறது. எடப்பாடி விஷயத்தில், பாஜக மேலிடம் வெளிப்படையாக கடுப்பையும், எதிர்ப்பையும் காட்டாத நிலையில், இது ஓபிஎஸ்ஸுக்கு ஜெர்க்கை தந்து வருகிறது.. எனவேதான், வேறு ஒரு ரூட்டை 2 நாட்களுக்கு முன்பு கையில் எடுத்தது.. ஊழல் முறைகேடு என்றாலே பாஜகவின் கண்கள் சிவந்து போய்விடும் என்பதால், அந்த ரூட்டிலேயே சென்று, எடப்பாடி மீதான அதிருப்தியை வெளிக்கொணர முடிவு எடுத்ததாக தெரிகிறது..

 காய் நகர்த்தல்

காய் நகர்த்தல்

அதனால்தான், எடப்பாடி பழனிசாமியின் ஊழல் விவகாரங்களை, ஓபிஎஸ் டீம் பகிரங்கப்படுத்த துவங்கி உள்ளது.. அதன்படியே, ஜேசிடி பிரபாகர் திடீரென எடப்பாடியின் ஊழல் குறித்த விஷயத்தை வெளிப்படையாக போட்டு உடைத்தார். "எடப்பாடி பழனிசாமியின் 41 ஆயிரம் கோடி ரகசியத்தை ஓபிஎஸ் அனுமதித்தால் வெளியிடுவேன்" என்று ஜே.சி.டி. பிரபாகரன் தெரிவித்திருந்தார். இது அதிமுகவில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு எதிர் வினையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, "ஜேசிடிபிரபாகரன் வேடந்தாங்கல் பறவை போல.. அவர் அதிமுககாரர் இல்லை" என்று ஒரே போடாக போட்டார்..

 PLAN A

PLAN A

ஆனாலும், இந்த விஷயத்தை லேசில் விடக்கூடாது என்பதுதான் ஓபிஎஸ் டீமின் எண்ணமாக உள்ளதாம்.. இப்படிப்பட்ட சூழலில்தான், சசிகலா டீம் சைலண்ட்டாக என்ட்ரி தந்துள்ளது.. எடப்பாடிக்கு எதிரான இந்த ஊழல் விவகாரத்தை பூதாகரமாக்கத் திட்டமிட்டு, மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசியமாக ஒரு புகாரை அனுப்பியிருக்கிறார்களாம்.. எடப்பாடி பழனிச்சாமியின் 41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் என்று அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருக்கும் ஜேசிடி பிரபாகரன் சொல்லியிருக்கிறார்.

 PLAN B

PLAN B

மலைக்க வைக்கும் மிகப்பெரிய தொகை குறித்து அவர் சொல்லியிருப்பதால் இதன் பின்னணியில் இருப்பதை புலனாய்வு செய்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று அந்த புகார் சுட்டிக்காட்டுகிறதாம்... வாக்கு வங்கி என்ற ஒரு விஷயத்துக்காக, எடப்பாடியிடம் கடுமை காட்டாமல் அதேசமயம், ஆதரவும் தராமல் இருந்து வருகிறது மேலிட பாஜக.. அதிமுகவின் ஓட்டுக்களை தன்வசப்படுத்த வேண்டும் என்ற ஒரே அரசியல் லாப நோக்கத்துக்காக, பாஜக மென்மைபோக்கை தற்சமயம் கடைப்பிடித்தாலும் "ஊழல், முறைகேடு, லஞ்சம்" என்று வந்துவிட்டால் லேசில் விடாது என்பதும் தெரிந்த விஷயம்தான்.. ஆக, ஓபிஎஸ் புள்ளி வைக்க, சசிகலா கோலம் போட ஆரம்பித்துள்ளார்.. இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகிறது என்று பார்ப்போம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+